இன்று பெரும்பாலானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதற்கு முக்கிய காரணம் உணவு முறை, மன அழுத்தம், சமூக வாழ்க்கை முறையில் மாற்றம், துரித உணவு போன்ற பல காரணங்கள் உண்டு. இந்த சர்க்கரை நோய் பிரச்சனை வந்துவிட்டால், பின்பு எந்த ஒரு உணவையும் விரும்பி, நிம்மதியாக சாப்பிட முடியாது.
ஏனெனில் சில வகையான உணவில் சர்க்கரையின் அளவு அதிகம் நிறைந்திருக்கும் என்பதால், உணவில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. உண்ணும் உணவில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், சில வகையான பழங்கள் மூலம் சர்க்கரையின் அளவை குறைக்க முடியும்.
சர்க்கரை நோயாளிகள் கிளைசமிக் இன்டக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) மற்றும் கிளைசமிக் லோடு (கிளைசமிக் சுமை) குறைவாக உள்ள பழங்களை தாராளமாக உண்ணலாம். எடுத்துக்காட்டாக ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, பப்பாளி, கொய்யா, நாவல், கிவி பழம், செர்ரி, அத்திப்பழம், சாத்துக்குடி போன்ற பழங்களை உண்ணலாம்.
பப்பாளி: நன்கு கனிந்த சுவை மற்றும் நல்ல ஊட்ட உணவாக இருக்கக்கூடிய பழம் இந்த பப்பாளி பழம். வைட்டமின் ஏ நிறைந்துள்ள பப்பாளி, பல்வேறு குணங்கள் கொண்டுள்ளது. சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவு துண்டுகளை உணவோடு சேர்த்து சாப்பிடுவது, உடலுக்கு நல்ல ஆற்றலை கொடுக்கும்.
பப்பாளியில் வைட்டமின்கள், இதர கனிமச்சத்துக்கள், அதிகம் நிறைந்துள்ளதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. மேலும் இந்த பழம் சற்று காயாக இருக்கும்போதே சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ள வேண்டும்.
சீதாப்பழம்: நன்கு கனிந்த சீதாப்பழத்தையும் உண்ணலாம். இதில் கிளைசமிக் இன்டக்ஸ் குறைவு எனவே இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.
இருப்பினும் சர்க்கரைக்கு நல்ல பலன் அளிக்கக்கூடிய பழங்களை பற்றி பார்க்கலாம். இதனை சாப்பிட்டால் இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை என்கிறார்கள்.
நெல்லிக்காய்: நெல்லிக்காயின் ஆயுர்வேத மருத்துவம், நீண்ட ஆயுள் தரக்கூடிய அருமையான கனி மற்றும் பல நோய் தீர்க்கும் நிவாரணி மேலும் சர்க்கரை நோய்க்கு இது அருமருந்தாகும். வைட்டமின் சி மற்றும் நார்சத்து அதிகம் உள்ளதால், தினமும் சாப்பிடும்போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“