scorecardresearch

அரிசி சாதம் ஃப்ரிட்ஜில் வைத்து… அட, இப்படி சாப்பிட்டா சுகர் ஏறாதாம்!

சர்க்கரை நோயாளிகளும் அரிசி சாதம் சாப்பிடலாம்; குறைந்த கிளைசெமிக் உணவாக அரிசி எவ்வாறு மாறுகிறது என்பது இங்கே

அரிசி சாதம் ஃப்ரிட்ஜில் வைத்து… அட, இப்படி சாப்பிட்டா சுகர் ஏறாதாம்!

சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுவது அவசியம். சர்க்கரை நோயாளிகள் அரிசி போன்ற கார்ப்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால், நம் வாழ்வில் அரிசி உணவுகள் தவிர்க்க முடியாததாக உள்ளன. இதனால் சர்க்கரை நோயாளிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். ஆனால் ஒரு எளிய முறையைப் பின்பற்றினால், சர்க்கரை நோயாளிகளும் அரிசி உணவை தாராளமாக உட்கொள்ளலாம். அது எப்படி என இப்போது பார்ப்போம்.

சர்க்கரை நோயாளிகள் குறைந்த கிளைசெமிக் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதன் காரணமாக, உங்கள் அரிசியின் கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்க விரும்புகிறீர்களா? அரிசியை சமைத்து, குளிர்சாதன பெட்டியில் வைத்து, அடுத்த நாள் சாப்பிடுங்கள், குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தலாம். இது முதலில் நம்பமுடியாததாகத் தோன்றினாலும், பல ஆய்வுகள், அரிசி மற்றும் உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளை குளிர்விப்பதன் மூலம், ஜீரணிக்கக்கூடிய மாவுச்சத்தை உங்கள் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டார்ச் ஆக மாற்ற முடியும் என்று நிரூபித்துள்ளது.

இதையும் படியுங்கள்: சூடான பொருளுடன் தேன் சேர்த்தால் இவ்ளோ ஆபத்தா? இதை ஒருபோதும் செய்யாதீங்க!

குளிரூட்டும் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட அரிசியை உட்கொள்வதால், டைப் 1 நீரிழிவு நோயாளிகளில் உணவுக்குப் பிந்தைய இரத்த குளுக்கோஸின் அளவு குறைகிறது. சமைத்த பிறகு அரிசியை குளிர்விப்பது மாவுச்சத்தின் பின்னடைவை ஏற்படுத்துகிறது, இது மனித செரிமான மண்டலத்தில் உறிஞ்ச முடியாத பொருளாகிறது என்று ஊட்டச்சத்து மற்றும் நீரிழிவு இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது.

ஊட்டச்சத்து நிபுணர்கள் அரிசியை குளிர்சாதன பெட்டியில் ஒரு நாள் சேமித்து வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி கூறியுள்ளனர். பல மருத்துவ ஆய்வுகள் சமைத்த மாவுச்சத்தை குளிர்விப்பது ஸ்டார்ச் ரெட்ரோகிரேடேஷன் எனப்படும் ஒரு செயல்முறையை ஏற்படுத்துகிறது என்று நிரூபித்துள்ளது, இது அதை எதிர்க்கும் ஸ்டார்ச் ஆக மாற்றுகிறது. சமைத்த அரிசி அல்லது உருளைக்கிழங்கு போன்ற அதிக மாவுச்சத்து உள்ள உணவுகளை 24 மணிநேரம் குளிரூட்டிய பின் உண்ணும் போது, ​​ஜீரணிக்கக்கூடிய மாவுச்சத்து எதிர்ப்பு சக்தியாக மாற்றப்படுகிறது.

செரிமான மாவுச்சத்துதான் நம் உடலில் உடைக்கப்பட்டு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்துகிறது. எதிர்ப்பு மாவுச்சத்தை உங்கள் உடலால் உடைக்க முடியாது. இப்போது எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்து உங்களுக்கு மோசமானதல்ல. இது உண்மையில் ப்ரீபயாடிக் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது குடலுக்கு உணவளிக்கிறது. எனவே, இது நமக்கு மிகவும் நல்லது. இது நமது இரத்த சர்க்கரையை அதிகரிக்காது, ஆனால் இது நமது ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகளுக்கு உணவளிக்கிறது, என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனவே, இந்த எளிய ஹேக்கைப் பின்பற்றி அரிசியை நீரிழிவு நோயாளிகளும் உண்ணும் வகையில் மாற்றலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Diabetes patients can eat cold rice to maintain blood sugar level