scorecardresearch

தினமும் 80- 123 கிராம் தயிர்: உங்க சுகர் அளவில் 14% குறையுதாம்!

குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் மற்றும் குறைந்த கிளைசெமிக் அளவு காரணமாக தயிர் அதிகமாக உட்கொள்வது நீரிழிவு நோயின் குறைந்த அபாயத்துடன் தொடர்புடையது – நீரிழிவு நோயாளிகளும் தயிர் சாப்பிடலாம், எப்படி என்பது இங்கே

curd
தயிர் அதிகமாக உட்கொள்வது நீரிழிவு நோயின் குறைந்த அபாயத்துடன் தொடர்புடையது

நீரிழிவு நோய் கோளாறு வந்துவிட்டாலே, அதைச் சாப்பிடக் கூடாது, இதைச் சாப்பிடக் கூடாது என்று ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதில் குறிப்பாக ஒன்று நீரிழிவு நோயாளிகள் தயிர் சாப்பிடலாமா என்பது.

பலருக்கு மதிய உணவை தயிருடன் முடித்தால் தான் திருப்தி வரும். ஆனால் நீரிழிவு நோய் வந்துவிட்டால், தயிர் சாப்பிடக்கூடாது, என்று சிலர் அறிவுறுத்துகின்றனர். ஆனால், நீரிழிவு நோயாளிகள் தயிர் சாப்பிடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் தயிர் சாப்பிடுவதால் இரத்தச் சர்க்கரை அளவும் குறைகிறது என்பது கூடுதல் நன்மை தரும் செய்தியல்லவா! நீரிழிவு நோயாளிகள் தயிர் எப்படி சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதையும், தயிர் சாப்பிடுவதால், சுகர் அளவு எவ்வாறு குறைகிறது என்பதையும் இப்போது பார்ப்போம்.

இதையும் படியுங்கள்: சுகர் முதல் ரத்த அழுத்தம் வரை கட்டுப்படுத்த இந்த ஒரு குழம்பு போதும்

நீரிழிவு என்பது ஒரு வளர்சிதை மாற்றக் கோளாறு ஆகும், இதற்கு உலகில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோய்க்கு பல மருந்துகள் இருந்தாலும், தயிர் நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மேலும், தயிரில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

2019 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, தயிர் போன்ற புரோபயாடிக் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்பதை நிரூபித்துள்ளது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகளில், இது குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த அல்லது வளர்ந்து வரும் நிலையைக் குறைக்கும் பல பண்புகளைக் கொண்டுள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு தயிரின் நன்மைகள்:

தி ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, தயிர் உட்கொள்வதன் மூலம் டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தை 14 சதவீதம் குறைக்கலாம். அதுவும் 80-123 கிராம் தயிர் சாப்பிடும் போது சுகர் அளவு உறுதியாகக் குறைகிறது. உண்மையில், தயிரின் புரோபயாடிக் விளைவு குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் வயதானவர்களுக்கு நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது.

குறைந்த கார்போஹைட்ரேட்

எப்போதும் குறைந்த கொழுப்பு வகை தயிரைத் தேர்ந்தெடுக்கவும். இனிப்பு இல்லாத, கிரேக்க பாணி தயிரில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளது, இது நீரிழிவு உணவுக்கு மிகவும் முக்கியமானது. அதிக கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகமாக சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.

புரதச்சத்து அதிகம்

தயிரிலும் புரதச்சத்து அதிகம். புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துகள் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும், இது உங்களுக்கு முழுமையின் உணர்வைத் தருகிறது மற்றும் பசியைத் தடுக்கிறது. நூறு கிராம் தயிரில் 10 கிராம் புரதம் உள்ளது, இது இரத்த சர்க்கரையின் ஆரோக்கியமற்ற உயர்வை குறைக்க அல்லது கட்டுப்படுத்த ஒரு சிறந்த உணவாக அமைகிறது.

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்

நீரிழிவு நோய் அதிக கொலஸ்ட்ரால் அளவுடன் தொடர்புடையது. இது குளுக்கோஸின் வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கிறது மற்றும் உடலில் கொழுப்பு அளவை அதிகரிக்கிறது. ஆய்வின்படி, அமிலோபிலஸ் மற்றும் பி. லாக்டிஸ் போன்ற புரோபயாடிக் பாக்டீரியா விகாரங்கள் நீரிழிவு நோயில் கொழுப்பின் அளவைக் குறைக்கும் திறனைக் கொண்டுள்ளன.

குறைந்த கிளைசெமிக் குறியீடு

குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் மற்றும் குறைந்த கிளைசெமிக் அளவு காரணமாக தயிர் அதிகமாக உட்கொள்வது நீரிழிவு நோயின் குறைந்த அபாயத்துடன் தொடர்புடையது என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. 92 சதவீத வெற்று தயிரில் இனிப்பு தயிரைக் காட்டிலும் குறைவான கிளைசெமிக் குறியீடு உள்ளது. அதுமட்டுமின்றி, சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் இது பெரிதும் உதவுகிறது.

சர்க்கரை நோயாளிகள் நல்ல தயிரை எப்படி தேர்வு செய்வது?

நிபுணர்களின் கூற்றுப்படி, சரியான தரம் மற்றும் தயிர் வகையைத் தேர்வு செய்ய தயாரிப்பின் லேபிளைப் பார்ப்பது முக்கியம். சந்தையில் கிடைக்கும் பல தயிர்களில் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. அதில் 10-15 சதவிகிதம் கார்போஹைட்ரேட்டுகள் அல்லது 9 கிராம் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ள சரியான வகை தயிரை தேர்வு செய்ய வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Diabetes patients can eat curd or yogurt to reduce blood sugar level details in tamil

Best of Express