சுகர் பேஷண்ட்ஸ் கவனத்திற்கு... இரவில் சர்க்கரை ஏறாமல் இருக்க 3 வகை உணவு; இந்த அளவு போதும்: டாக்டர் பிள்ளை டிப்ஸ்

சர்க்கரை நோயாளிகள் இரவு என்ன மாதிரியான உணவுகள் சாப்பிட வேண்டும். அதேபோல சர்க்கரை ஏறாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றியும் டாக்டர் பிள்ளை கூறுவது பற்றி பார்ப்போம்.

சர்க்கரை நோயாளிகள் இரவு என்ன மாதிரியான உணவுகள் சாப்பிட வேண்டும். அதேபோல சர்க்கரை ஏறாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றியும் டாக்டர் பிள்ளை கூறுவது பற்றி பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
doctor pillai

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சரியான இரவு உணவு அத்தியாவசியம். டாக்டர் பிள்ளை  நல்ல தூக்கத்திற்கும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும் மூன்று எளிய மற்றும் சத்தான இரவு உணவு விருப்பங்கள் பற்றி கூறியுள்ளார். 

Advertisment

இரவு உணவாக சாதம் சாப்பிட்டால்தான் தூக்கம் வரும் என்பவர்களுக்கு, பழுப்பு அரிசி (பிரவுன் ரைஸ்) ஒரு சிறந்த மாற்றாகும். வெள்ளை அரிசியை விட அதிக நார்ச்சத்து கொண்டது பழுப்பு அரிசி.

இதனுடன், ஒரு கிண்ணம் நிறைய காய்கறிகளை சேர்த்துக்கொள்ளுங்கள். இந்தக் காய்கறிகளை குழம்பில் சேர்த்தோ அல்லது தனியாக வேகவைத்தோ சாப்பிடலாம். சுவைக்கு, சாதத்துடன் சிறிது பருப்பு சேர்த்துக்கொள்வது இன்னும் நல்லது. வயிறு நிறையச் சாப்பிட்ட திருப்தியையும் இது தரும்.

லேசான இரவு உணவுக்கு, இரண்டு கோதுமை தோசைகள் ஒரு நல்ல தேர்வு. கோதுமை மாவை வீட்டிலேயே கரைத்து தோசைகளாக சுட்டுக்கொள்ளலாம். தோசைக்கு துணையாக, காய்கறி குருமா அல்லது எளிய பொடி சேர்த்துச் சாப்பிடலாம். இது விரைவாகவும், எளிதாகவும் செய்யக்கூடிய ஒரு விருப்பமாகும்.

Advertisment
Advertisements

மிகவும் லேசான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த இரவு உணவுக்கு, சூப் சிறந்ததாகும். காய்கறி சூப்பை தேர்வு செய்யலாம், அல்லது விருப்பப்பட்டால் சிக்கன் சூப் கூட அருந்தலாம். சூப்புடன், ஒரு கிண்ணம் நிறைய காய்கறி சாலட்டை சேர்த்துக்கொள்ளுங்கள். 

வெள்ளரி, தக்காளி, கேரட் போன்ற உங்களுக்குப் பிடித்தமான காய்கறிகளைச் சேர்த்து சாலட் செய்யலாம். சூப் மற்றும் சாலட் கலவையானது உங்கள் வயிறை நிறைத்து, அதே சமயம் உடலுக்கு அதிகப்படியான சுமையை ஏற்படுத்தாது.

இந்த இரவு உணவு விருப்பங்கள் உங்களுக்கு நல்ல தூக்கத்தை அளித்து, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.  

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Superfoods that can reduce the risks of diabetes Diabetes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: