scorecardresearch

சுகர் இருக்கா? அப்போ உங்களுக்கு விட்டமின் டி, விட்டமின் பி12, ஸிங்க், அயோடின் அவசியம் வேணும்!

சர்க்கரை நோய் இருக்கிறதா? அப்போ உங்களுக்கு விட்டமின் டி, விட்டமின் பி12, ஸிங்க், அயோடின் அவசியம் வேண்டும். அவற்றை பெறுவதற்காண உணவுகளை மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் எடுத்துக் கொள்ளலாம்.

சுகர் இருக்கா? அப்போ உங்களுக்கு விட்டமின் டி, விட்டமின் பி12, ஸிங்க், அயோடின் அவசியம் வேணும்!

நீரிழிவு நோயாளிகளுக்கு நுண்ணூட்டச் சத்து குறைபாடுகள் இருக்கலாம், குறிப்பாக ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள், அதனால், ஏற்படும் பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு நுண்ணுட்டச் சத்து குறைபாடுகள் இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீரிழிவு மற்றும் அது சார்ந்த அறிவியல்களுக்கான ஃபோர்டிஸ் சி.டி.ஓ.சி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அனூப் மிஸ்ரா ஆலோசனை கூறுகிறார்.

நீரிழிவு உட்பட பல நோய்களால் பாதிக்கப்பட்ட 78 வயது முதியவரின் மகன் என்னிடம் கேட்டார்: “என் தந்தைக்கு என்ன ஊட்டச்சத்துக்கள் தேவையா? அவருடைய வயதில், பல நோய்களிலும், சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் இரண்டும் முக்கியம் என்று நான் அவரிடம் சொன்னேன். முக்கியமாக, அவை சரியான முறையில் வழங்கப்பட வேண்டும்.” என்று கூறினேன்.

புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு ஆகிய மூன்று முக்கிய பெரிய ஊட்டச்சத்துகள் உள்ளன. இவை அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் சரியான விகிதத்தில் எடுக்கப்பட வேண்டும். இவை ஒப்பீட்டளவில் பெரிய அளவில் நமது உணவில் உள்ளன. மறுபுறம், நுண்ணூட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. நுண்ணூட்டச்சத்துகள் பல்வேறு உணவுகளில் சிறிய அளவில் உள்ளன. அவற்றை வெறும் கண்களால் பார்க்க முடியாது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வாழும் மக்களிடையே நுண்ணூட்டச் சத்துக்களின் குறைபாடுகள் கணிசமான அளவிலும் மேற்கத்திய நாடுகளில் மிகவும் குறைவாகவும் உள்ளன.

பல நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன – இரும்புச் சத்து, வைட்டமின்கள் (பி 12, பிற பி வைட்டமின்கள், ஃபோலேட், வைட்டமின் டி, ஏ, சி), தாதுக்கள் (மெக்னீசியம், கால்சியம், செலினியம், ), அயோடின், சோடியம், பொட்டாசியம், குளோரைடு, சல்பர் மற்றும் பல. கடுமையான நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் ஸ்கர்வி என்ற நோய் ஏற்படும். பல நாட்கள் பழங்களை (வைட்டமின் சி-யின் ஆதாரம்) சாப்பிடாமல், ஈறுகளிலும் மற்ற இடங்களிலும் இரத்தக் கசிவினால் அவதிப்படும் கடலுக்குச் செல்பவர்களுக்கு இது நிகழ்கிறது. இத்தகைய தீவிர குறைபாடுகள் இப்போது அரிதாகவே காணப்படுகின்றன. ஆனால், சில நுண்ணூட்டச்சத்துக்களின் சிறிய குறைபாடுகள்கூட உடல் உறுப்புகளின் செயல்பாடுகளையும் உடலின் சீரான செயல்பாட்டையும் பாதிக்கலாம். குறைபாடுகளைத் தவிர்க்க தினசரி தேவைப்படும் நுண்ணூட்டச்சத்துக்களின் அளவு பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளல் (ஆர்.டி.ஏ) என அழைக்கப்படுகிறது.

நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளால் பல நோய்கள் ஏற்படுகின்றன – அயோடின் குறைபாடால் – தைராய்டு அழற்சி, இரும்புச்சத்து குறைபாடால் – இரத்த சோகை, வைட்டமின் பி குறைபாடால் – நரம்பு பாதிப்பு, வைட்டமின் டி/கால்சியம் குறைபாடால் – ரிக்கெட்ஸ்/எலும்பு பலவீனம், ஃபோலேட் குறைபாடால் – இரத்த சோகை/கரு பாதிப்பு மற்றும் பல நோய்கள் ஏற்படுகின்றன. இந்தியாவில் இரும்புச்சத்து, வைட்டமின் டி, வைட்டமின் பி12 மற்றும் அயோடின் குறைபாடு பரவலாக உள்ளது. இந்தக் குறைபாடுகள் குழந்தைப் பருவம், இளமைப் பருவம், கர்ப்ப காலம் மற்றும் முதுமைப் பருவத்தில் பொதுவாக ஏற்படும். காய்ச்சல், நீண்ட நோய்கள், குடல் செயலிழப்பு, நுண்ணுட்டச் சத்துகளை எடுத்துக்கொள்ளாமை, நாள்பட்ட இரத்தப்போக்கு, வயிற்றுப்போக்கு/வாந்தி, நாள்பட்ட சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்கள் போன்ற மன அழுத்த சூழ்நிலைகளில் குறைபாடுகள் ஏற்படலாம். குழந்தைகள் அல்லது கர்ப்பிணிப் பெண்களின் நுண்ணூட்டச் சத்துக்களின் குறைபாடு மூளை, எலும்பு, நோய் எதிர்ப்புச் சக்தி, இரத்தம் உறைதல் மற்றும் பிற முக்கிய உறுப்புச் செயல்பாடுகளின் வளர்ச்சியைப் பாதிக்கலாம்.

நீரிழிவு மருந்துகள் மற்றும் குறைபாடுகள்

நீரிழிவு நோயாளிகளுக்கு நுண்ணூட்டச் சத்து குறைபாடுகள் இருக்கலாம். குறிப்பாக ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் மற்றும் சிக்கல்களால் பாதிக்கப்படுபவர்கள். சுவாரஸ்யமாக, நீரிழிவு கட்டுப்பாட்டில் வைட்டமின் டி குறைபாடு ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும் என்பதையும், அதை சப்ளிமெண்ட்ஸ் கொடுப்பதன் மூலம் சரிசெய்ய வேண்டும் என்பதையும் எங்கள் ஆராய்ச்சி காட்டுகிறது. நீரிழிவு நோய்க்கான முக்கிய மருந்தான மெட்ஃபோர்மின், அதிக அளவு மற்றும் நீண்ட நேரம் பயன்படுத்தினால், வைட்டமின் பி12 குறைபாட்டை ஏற்படுத்தும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வைட்டமின் பி 12 கூடுதலாகத் தேவைப்படுகிறது.

இதில் சுவாரஸ்யமாக, நீரிழிவு நோயாளிகளில் பால்-சைவ உணவு உண்பவர்களுக்கு (பி 12, அயோடின், துத்தநாகம்) குறைபாடுகளும், அசைவ உணவு உண்பவர்களுக்கு (இரும்பு, துத்தநாகம், ஃபோலேட், பி 12, அயோடின்) என பல குறைபாடுகள் காணப்படுகின்றன. இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துவதில் மெக்னீசியத்தின் பங்கு அதிக அளவில் உள்ளது.

வயதான நோயாளிகள் போதுமான உணவு உட்கொள்ளல், குடல் பிரச்னைகள், பல் பிரச்சனைகள், பல நோய்கள் மற்றும் பலவற்றால் பல நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். முதியோர்களில் 20-60 சதவீதம் பேருக்கு இதுபோன்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுகள் இருக்கும் என்றும், இந்த எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக இருக்கலாம் என்றும் ஒரு ஆய்வு காட்டுகிறது. பெரிய ஊட்டச்சத்தான புரதம் மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் இரண்டிற்கும் கவனமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

உணவுகளை சமநிலைப்படுத்துவதைத் தவிர, அத்தகைய நபர்களுக்கு இந்த குறைபாடுகளை சரிசெய்ய பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவைப்படும். சில நேரங்களில் ஊசி மூலம் சிகிச்சை தேவைப்படுகிறது (எ.கா. இரும்புச்சத்து, வைட்டமின் பி12, வைட்டமின் டி போன்றவை) தேவைப்படுகிறது. வயதானவர்கள் (அல்லது அந்த விஷயத்தில் யாரேனும்) ஆன்டாசிட் மருந்துகளை (பான்டோபிரசோல், ஓமேப்ரஸோல் போன்றவை) அடிக்கடி மற்றும் நீண்ட நேரம் பயன்படுத்தினால், பி12, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் மெக்னீசியம் குறைபாடுகள் ஏற்படலாம்.

பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கொண்ட மாத்திரைகள் பொதுவாக மருந்து கடைகளில் விற்கப்படுகின்றன. பலர் தங்கள் மருத்துவர்களின் மேற்பார்வையின்றி இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில், இவை உதவக்கூடும், ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளில் உதவாது. பெரிய வைட்டமின் மற்றும் தாதுப் பற்றாக்குறை உள்ளவர்களுக்கு, அதிக அளவு குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் அவசியம் (எ.கா., வைட்டமின் டி, பி12). பிறப்பு குறைபாடுகளைத் தவிர்ப்பதற்கு ஃபோலேட் போன்ற குறிப்பிட்ட வைட்டமின்கள் கர்ப்ப காலத்தில் தேவைப்படுகின்றன. இறுதியாக, வைட்டமின் டி, துத்தநாகம், கால்சியம் போன்றவற்றின் அதிகப்படியான அளவுகளில் இந்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைச் சேர்ப்பதால் எதிர் விளைவுகள் இல்லாமல் இல்லை. நீரிழிவு நோயாளிகள் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், அதிகப்படியான பொட்டாசியம் (பெரும்பாலும் பழங்களில்) கொடுக்கப்பட்டால், உயிருக்கு ஆபத்தான இதய கோளாறுகள் உருவாகின்றன. எனவே, இந்த முக்கியமான சிறிய ஊட்டச்சத்துக்கள் நிபுணர் கண்காணிப்பின் கீழ் எடுக்கப்பட வேண்டும்.

இந்த கட்டுரையை எழுதியவர் டாக்டர் அனூப் மிஸ்ரா, பத்மஸ்ரீ விருது பெற்றவர். ‘Diabetes with Delight’ என்ற புத்தகத்தை எழுதியவர்)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Diabetics need vitamin d vitamin b12 iodine and zinc