சர்க்கரை வியாதி முதல் எடை குறைப்பு வரை உள்ள அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாக உள்ள காய் கொத்தவரங்காய் என்று மருத்துவர் கௌதமன் கூறுகிறார்.
இந்த கொத்தவரங்காயை வாரம் மூன்று முறையாவது எடுத்து கொள்வது உடலுக்கு அவ்வளவு நன்மை பயக்கும். வாரம் இரண்டு முறை கொத்தவரங்காய் சாப்பிட்டு வர வேகமாக உடல் எடை குறைவதை பார்க்கலாம். மலச்சிக்கல், இதய பிரச்சனை போன்ற பிரச்சனைகளும் விரைவில் சரியாகும்.
கொத்தவரங்காய் குறைந்த கலோரிகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. அவை நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி, ஃபோலேட் மற்றும் இரும்பு, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்த ஒரு காய்கறியாக உள்ளது.
அதிக நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து காரணமாக, கொத்தவரங்காய் பசியைக் குறைக்க உதவும். மேலும் இதனால் எடை குறையவும் முடியும். கொத்தவரங்காயில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன, அவை வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க உதவுகிறது.
கொத்தவரங்காயில் உள்ள அதிக நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கும் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கும். இது குடல் இயக்கத்தை சீராக்கவும் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்கவும் உதவுகிறது.
கொத்தவரங்காயில் குறைந்த கிளைசெமிக் உள்ளதால் இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்காது. இது நீரிழிவு நோயாளிகள் அல்லது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு ஏற்ற உணவாக இருக்கும்.
சர்க்கரை நோயை எளிதில் குணப்படுத்திட கொத்தவரங்காய் உதவுகிறதா? குருஜி Dr.கௌதமன் விளக்குகிறார்
கொத்தவரங்காயில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு உதவும். நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது, பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கொழுப்பைக் குறைப்பது மற்றும் ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவைப் பராமரிப்பது இருதய நோய்களின் அபாயத்தையும் குறைக்க உதவும்.
பக்கவாதம் சார்ந்த நோய்கள் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வர விரல் எலும்புகள் பலம் பெரும். தினசரி வாழ்வில் குழந்தைகள் 50 கிராமையும் பெரியவர்கள் 150 கிராமும் கொத்தவரங்காயை சாப்பிட்டு வர உடலில் பல பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“