பண்டைய காலம் முதல் இன்று வரை வெந்தயம் எல்லாவித நோய்களுக்கும் மருந்தாக இருக்கின்றது. முறையான உணவு முறைகளில் கவனம் எடுத்தாலே ஆரோக்கியம் கிடைத்திடும். வெந்தயத்தை உணவாக நாம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய், சிறுநீரக மண்டல தொற்றுக்கள் சீராகும்.
மேலும் பித்தத்தின் சீற்றம் குறைந்து உணவின் மீதுள்ள சிரமம் குறைகின்றது. பெண்களின் மாதவிலக்கு சார்ந்த அசௌகரியங்களை குணமாக்குகின்றது. இயற்கையாக உடல் சூட்டை தனித்து இளமையாக இருக்க செய்கின்றது.
மலசிக்கலற்ற வாழ்க்கையும், மூலநோயும் குணமாக செய்கின்றது. குழந்தைகளுக்கு வயிற்றில் உண்டாகும் புழுக்களை எளிதில் வெளியேற்றி ஆரோக்கியம் தருகின்றது.
தீராத மூட்டு வலிகள், உடல் சார்ந்த வலிகள், இடுப்பு வலிகளால் ஏற்படும் உபாதைகளுக்கு முழு நிவாரணம் அளிக்கின்றது. வாழ்நாள் முழுவதும் நோயற்ற வாழ்வை தந்திடும் காயகல்பமாக உள்ள வெந்தயத்தை உணவாக சாப்பிட்டு ஆரோக்கியம் அடையலாம்.
மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக இருக்கும் வெந்தயத்தை எப்படி சாப்பிட்டால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம் என மருத்துவர் கௌதமன் ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறியதாவது,
வெந்தயம் சாப்பிடும் முறை: ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் வெந்தயம் என்ற அளவில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். மூன்று இரவுகள் வெந்தயத்தை முளைக்கட்ட வைத்து அதனை நான்காவது நாள் காலையில் தண்ணீர் விட்டு அரைத்து பால் பிழிந்து சாப்பிடலாம். அல்லது அதை வேக வைத்து சாப்பிடலாம். இதை ரெகுலராக சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கும்.
ஆரோக்கியத்தின் அருமருந்து வெந்தயம் ! பாரம்பரிய வைத்தியம் | Fenugreek Benefits| Dr. கௌதமன்
உடலில் குளிர்ச்சி வேண்டும் என நினைப்பவர்கள் வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிடலாம். மற்றவர்கள் வெந்தயத்தை பொடியாக்கி சாப்பிடும் போது தான் அதன் நன்மைகள் முழுமையாக கிடைக்கும் என மருத்துவர் கௌதமன் கூறுகிறார்.
மலச்சிக்கல், உடல் பருமன், மாதவிடாய் கோளாறு, உடல் சூடு போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.