சுகர் பேஷண்ட்ஸ் கவனத்திற்கு... 3 இட்லி, 2 சட்னி; தேங்காய் மட்டும் வேணாம்; ஒருநாளைக்கு இத மட்டும் சாப்பிடுங்க: டாக்டர் கௌரி டிப்ஸ்

நீரிழிவு நோயாளிகள் காலை உணவை எப்படி எடுத்து கொள்ள வேண்டும். காலை உணவில் என்ன வெல்லாம் இருக்க வேண்டும் என்று டாக்டர் கௌரி கூறுகிறார்.

நீரிழிவு நோயாளிகள் காலை உணவை எப்படி எடுத்து கொள்ள வேண்டும். காலை உணவில் என்ன வெல்லாம் இருக்க வேண்டும் என்று டாக்டர் கௌரி கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
காவேரி மருத்துவமனை

நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு நாள் உணவுத் திட்டம் பற்றி காவேரி ஹாஸ்பிட்டல் யூடியூப் பக்கத்தில் டாக்டர் கௌரி டிப்ஸ் கூறுகிறார். நீரிழிவு நோயை குணப்படுத்த முடியாது என்றாலும், அதைத் தடுக்கலாம் மற்றும் கட்டுப்படுத்தலாம் என்று டாக்டர் கூறுகிறார். 

Advertisment

சரியான நேரத்தில் சாப்பிடுவது மற்றும் சரியான உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியம்.  காலை உணவை 8 மணி முதல் 9 மணிக்குள் உட்கொள்வது நல்லது.

மேலும், தேங்காய் சட்னியைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில் அதில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கலாம். சர்க்கரை, இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது இரத்த சர்க்கரை உயர்வைத் தடுக்க உதவும். 

தேங்காயில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு அது உகந்ததாக இருக்காது. மற்ற காய்கறிகள் மற்றும் பருப்புகளை அடிப்படையாகக் கொண்ட சட்னிகளை உட்கொள்ளலாம். இவை நார்ச்சத்து மற்றும் புரதச்சத்துக்களைக் கொண்டிருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

Advertisment
Advertisements

முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் பல்வேறு காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. புரதச்சத்துக்காக மீன், கோழி மற்றும் பருப்பு வகைகளை உட்கொள்ளலாம்.

ஆரோக்கியமான கொழுப்புகளுக்காக நட்ஸ், விதைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உணவில் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம். உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம், எனவே ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம்.

சராசரியாக ஒரு இந்திய நபருக்கு சுமார் 1800 கிலோ கலோரிகள் தேவை. சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும் என்று டாக்டர் கூறுகிறார். 

காலை உணவை 8 முதல் 9 மணிக்குள் சாப்பிட வேண்டும். சர்க்கரை நோயாளிகள் தேங்காய் சட்னி தவிர்க்க வேண்டும். சர்க்கரை, இனிப்பு பானங்கள், மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். 

முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். 
மீன், கோழி, மற்றும் பருப்பு வகைகள் போன்ற புரத உணவுகளையும் நட்ஸ், விதைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை சேர்த்துக் கோள்ளலாம். அதேபோல ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்கவும் பரிந்துரைக்கிறார்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Superfoods that can reduce the risks of diabetes Diabetes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: