ஹெவியா சாப்பிட்ட பிறகு சோடா குடிக்கிற ஆளா நீங்க? உஷார்... மாரடைப்பு அபாயம்: உணவியல் நிபுணர் பிரபா
நிறைய பேருக்கு ஹெவியா சாப்பிட்ட பிறகு சோடா குடிக்கிற பழக்கம் இருக்கிறது. யாருக்காவது அப்படி ஒரு பழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்திவிடுங்கள் இல்லையென்றால் மாரடைப்பு வருகிற அபாயம் இருகிறது என்று உணவியல் நிபுணர் பிரபா எச்சரிக்கிறார்.
ஹெவியா சாப்பிட்ட பிறகு இந்த சோடா குடிப்பதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக உணவியல் நிபுணர் பிரபா கூறுகிறார்.
நிறைய பேருக்கு ஹெவியா சாப்பிட்ட பிறகு சோடா குடிக்கிற பழக்கம் இருக்கிறது. யாருக்காவது அப்படி ஒரு பழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்திவிடுங்கள் இல்லையென்றால் மாரடைப்பு வருகிற அபாயம் இருகிறது என்று உணவியல் நிபுணர் பிரபா எச்சரிக்கிறார்.
Advertisment
பலரும் நான் வெஜ் என்றால் ஒரு கட்டு கட்டலாம் என்று ஹெவியாக சாப்பிடுகிறார்கள். சாப்பிட்ட பிறகு ஜீரணமாக சோடா குடிக்கிறார்கள். ஆனால், ஹெவியா சாப்பிட்ட பிறகு இந்த சோடா குடிப்பதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக உணவியல் நிபுணர் பிரபா கூறுகிறார்.
இது குறித்து டயட்டிஷியன் பிரபா (Dietitian_Prabha) என்ற யூடியூப் சேனலில் ஒரு வீடியோவில் உணவியல் நிபுணர் பிரபா கூறுவதை அப்படியே இங்கே தருகிறோம்.
Advertisment
Advertisements
உணவியல் நிபுணர் பிரபா கூறுகிறார்: “இப்போதெல்லாம் நிறைய பேரிடம் ஒரு கெட்டப் பழக்கம் வந்துவிட்டது. அது என்ன என்றால், நல்லா ஹெவியா அசைவ உணவு சாப்பிட்டு முடித்துவிட்டு கடைசியாக சோடாவில் போய் முடிக்கிறது. தயவு செய்து அதை நிறுத்துங்கள். இல்லையென்றால், மாரடைப்பு வந்து உங்கள் வாழ்க்கையே முடிந்துவிடும். ஏன் என்றால், சோடாவில் ஹைலெவல் சுகர் கண்டெண்ட் இருப்பதால், கெட்ட கொழுப்பு அதிகரிக்கும். ரத்த ஓட்டம் அடர்த்தி அதிகமாகிவிடும். ஏற்கெனவே, அசைவ உணவு ஹெவியாக சாப்பிட்டு இருப்பதால், இது பிரஷ்ஷரை அதிகரிக்கும். இதை தொடர்ந்து ஒரு பழக்கமாக வைத்துக்கொண்டு வருபவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கும், இதயம் தொடர்பான பிரச்னைகள் வரும், மாரடைப்பு வரும், சுகர் வரும், உடல் எடையும் கூடும். அதனால், எதற்கு எதெல்லாம். ஹெவியா சாப்பிட்டது தெரியக்கூடாது என்பதற்காக இந்த சோடா குடித்து நல்லா ஏப்பம் விடுகிறார்கள். சாப்பிட்டது என்னமோ செரிமானமாகிவிட்டது என்று நினைத்துக்கொள்கிறார்கள். இதனால், ப்ளோட்டிங், அசிடிட்டி, கேஸ் பிராப்ளம் எல்லாம் வந்துவிடும். அப்புறம், நீங்களே நினைத்தாலும், இந்த ஏப்பம் விடுவதை நிறுத்தவே முடியாது.
ஹெவியா சாப்பிட்டுவிட்டால் வேறு என்னதான் செய்வது என்றால், சாப்பிட்ட பிறகு ஃபுரூட் சாலட் சாப்பிடலாம். ஹெர்பல் டீ, செம்பருத்தி டீ, சால்ட் போட்டு லெமன் ஜூஸ் அல்லது மோர் குடிக்கலாம்.
உங்களுடைய நண்பர்கள் குழுவிலோ அல்லது உங்கள் வீட்டிலோ யாராவது ஒருவர் ஹெவியா சாப்பிட்ட பிறகு, சோடா குடிக்கும் பழக்கம் உள்ளவர் என்றால் அவர்களுக்கு அப்படி ஹெவியா சாப்பிட்ட பிறகு சோடா குடிக்க வேண்டாம் என அறிவுறுத்துங்கள்” என்று உணவியல் நிபுணர் பிரபா எச்சரிக்கிறார்.