மலச் சிக்கலுக்கு அருமருந்து... தொப்பை கொழுப்பை கரைக்கவும் பெஸ்ட்; பட்டை சேர்த்த இந்த டிரிங்க்: டாக்டர் கே. ஆர். அக்‌ஷயன் டிப்ஸ்

இதற்காக, பட்டை, இஞ்சி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சர்க்கரை சேர்க்காமல் ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளையும் குடிக்கலாம்.

இதற்காக, பட்டை, இஞ்சி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சர்க்கரை சேர்க்காமல் ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளையும் குடிக்கலாம்.

author-image
WebDesk
New Update
Belly reduce

இன்றைய காலகட்டத்தில் பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தொப்பை. இது அழகியல் ரீதியாக மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். தொப்பையை குறைப்பதற்கான பல்வேறு அம்சங்கள் குறித்து மிஸ்டர் லேடிஸ் யூடியூப் சேனலில் மருத்துவர் அக்‌ஷயன் விளக்கம் அளித்துள்ளார். அவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்..

Advertisment

தொப்பைக் கொழுப்பு என்பது உடலில் சேரும் "குப்பை" போன்றது என்று மருத்துவர் அக்‌ஷயன் கூறுகிறார். உடலில் சேரும் நச்சு பொருட்கள் மற்றும் வளர்சிதை மாற்றக் கழிவுகள் தொப்பைக் கொழுப்பிற்கு பங்களிக்கின்றன. இவை தினசரி அகற்றப்பட வேண்டும்.

நல்ல கொழுப்புகள் மற்றும் கெட்ட கொழுப்புகள் என கொழுப்பின் வகைகள் இருக்கின்றன. குறிப்பாக, "விசரல் கொழுப்பு" (Visceral fat) தொப்பைக் கொழுப்பிற்கு முக்கிய காரணமாகும். இது உறுப்புகளைச் சுற்றி குவிகிறது 

இதனை தடுக்க உணவு முறை மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் அக்‌ஷயன் அறிவுறுத்துகிறார். அதன்படி, வெண்ணெய் மற்றும் பனீர் போன்ற உணவுகளில் காணப்படும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளை, குறிப்பாக இரவில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

Advertisment
Advertisements

பாதாம் போன்ற நல்ல கொழுப்புகளை உட்கொள்ளலாம். விசரல் கொழுப்பை குறைக்க உணவோடு வெந்நீர் குடிக்க வேண்டும். இது தவிர ஒரு தேநீர் தயாரித்து குடிப்பதன் மூலம் கொழுப்பை குறைக்க முடியும்.

இதற்காக, பட்டை, இஞ்சி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சர்க்கரை சேர்க்காமல் ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளையும் குடிக்கலாம். இந்த தேநீர் வழக்கமான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. மேலும், வயிற்றை இலகுவாக உணர வைக்கிறது. இது மலச்சிக்கலையும் குறைக்க உதவுகிறது.

எனவே, சரியான உணவுப் பழக்கம், உடல் செயல்பாடு மற்றும் இந்த சிறப்பு தேநீர் மூலம் தொப்பையை குறைக்கலாம் என்று மருத்துவர் அக்‌ஷயன் தெரிவித்துள்ளார்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
belly fat

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: