நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கான ஒரு முக்கிய உத்தியாக, புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காலை உணவு முக்கியம் என்று டாக்டர் அருண்கார்த்திக் தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
இது போன்ற உணவு இரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்தவும், திருப்தி உணர்வை அதிகரிக்கவும், உணவு ஏக்கம் குறைக்கவும் உதவும். ஆனால் டாக்டர் அருண் கார்த்திக் பரிந்துரைக்கும் காலை உணவு குறைந்த கிளைசெமிக் குறியீடு ஆகும். பாரம்பரிய சுவைகளையும், ஊட்டச்சத்து நன்மைகளையும் இணைக்கும் இந்த ஆரோக்கியமான காலை உணவு எடை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு உதவும்.
டாக்டர் அருண் கார்த்திக் பரிந்துரைக்கும் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் அந்த 5 காலை உணவுகள்:
அடை தோசை: பல்வேறு பருப்பு வகைகள் மற்றும் அரிசியைக் கொண்டு செய்யப்படும் இந்த தோசை நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்தது. இது இரத்த சர்க்கரை உயர்வை மெதுவாக்கும்.
பெசரேட்டு: பச்சைப் பயிரைக் கொண்டு செய்யப்படும் இந்த ஆந்திரா உணவு புரதம் மற்றும் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரம். இது எளிதில் ஜீரணமாகும் மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.
கோதுமை ரவா உப்மா: வெள்ளை ரவைக்கு பதிலாக கோதுமை ரவையில் காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் உப்மா நார்ச்சத்து நிறைந்தது. காய்கறிகள் மேலும் ஊட்டச்சத்துக்களை சேர்க்கும்.
கடலை கறி மற்றும் இடியாப்பம்: கடலை கறியில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து, இடியாப்பத்துடன் சேர்ந்து சீரான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும். இடியாப்பம் அரிசியால் செய்யப்பட்டிருந்தாலும், கடலையின் சத்துக்கள் அதன் கிளைசெமிக் குறியீட்டை குறைக்கலாம்.
முட்டை தோசை: தோசையுடன் முட்டை சேர்த்துக்கொள்வது புரதத்தின் அளவை அதிகரிக்கும். புரதம் நிறைவான உணவு இரத்த சர்க்கரை உயர்வை கட்டுப்படுத்த உதவும்.
Advertisment
Advertisements
டாக்டர் அருண் கார்த்திக் இந்த உணவுகளை பரிந்துரைப்பதன் காரணம், இவை நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகமாகவும், கிளைசெமிக் குறியீடு குறைவாகவும் இருப்பதால் இரத்த சர்க்கரையை சீராக வைக்க உதவுகின்றன.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.