சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய எத்தனையோ உணவு முறை குறித்து மருத்துவர்கள் தொடர்ச்சியாக பரிந்துரைத்து வருகின்றனர். அந்த வகையில் இரத்தத்தில் சுகரின் அளவை குறைக்க கெஃபிரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர் ஆஷா லெனின் தெரிவித்துள்ளார்.
Advertisment
ஒருவர் எந்த நோயும் இல்லாமல், 40 வயதிலும் 39 வயது போல இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால், அப்போதுதான் நீங்கள் அவரை 'சூப்பர்' என்று வியந்து பார்ப்பீர்கள். இதோ, அப்படிப்பட்ட ஒரு ஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் ஒரு அற்புதமான உணவுப் பொருள் பற்றி டாக்டர் கூறுகிறார்.
கருப்பு கவுனி அரிசி சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, ஒட்டுமொத்த உடல் நலனை மேம்படுத்துகிறது.
குளூட்டன் இல்லாத உணவான கவுனி அரிசி, ஆட்டிசம் மற்றும் ஏ.டி.எச்.டி குறைபாடுள்ள சிறப்பு குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளை நியூரோ செயல்பாடுகளை ஊக்குவிக்கின்றன.
Advertisment
Advertisements
குறைந்த கலோரி கொண்ட இந்த கவுனி அரிசியுடன் நெய் சேர்த்து சாப்பிடும்போது, தசைகள் வலுப்பெற்று, உடல் உறுதியாகும். இதில் உள்ள 'ஆந்தோசயனின்' என்ற வயலட் நிறப்பொருள், புற்றுநோய் வராமல் 200% தடுக்கிறது.
மேலும், இது உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றி, தசைகளை இறுக்கி, சுருக்கங்கள் விழுவதைக் குறைத்து, இளமையான தோற்றத்தைத் தக்கவைக்க உதவுகிறது. கவுனி அரிசி, ஒரு சூப்பர்ஃபுட் மட்டுமல்ல, பல நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும் ஒரு அரிய உணவுப் பொருளும் ஆகும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.