21 நாளில் வெயிட் குறையணுமா? இந்த ஒண்ணு மட்டும் சாப்பிடாதீங்க: டாக்டர் பாலாஜி ரவில்லா டிப்ஸ்

குறிப்பாக, 21 நாட்களுக்கு சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தும் போது இந்த மாற்றங்கள் அனைத்தும் மிகத் தெளிவாக இருக்கும் என்று மருத்துவர் பாலாஜி ரவில்லா வலியுறுத்துகிறார்.

குறிப்பாக, 21 நாட்களுக்கு சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தும் போது இந்த மாற்றங்கள் அனைத்தும் மிகத் தெளிவாக இருக்கும் என்று மருத்துவர் பாலாஜி ரவில்லா வலியுறுத்துகிறார்.

author-image
WebDesk
New Update
Doctor Balaji Ravilla

உடல் எடையை விரைவாக குறைப்பதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்று பலரும் யோசித்திருப்போம். அந்த வகையில் நம்முடைய உணவில் இருந்து ஒரே ஒரு பொருளை தவிர்ப்பதன் மூலம் இதனை சாத்தியப்படுத்த முடியும் என்று காஸ்மோ ஹெல்த் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் மருத்துவர் பாலாஜி ரவில்லா தெரிவித்துள்ளார்.

Advertisment

சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் சுமார் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் உடல் எடை குறையத் தொடங்கும் என்று மருத்துவர் பாலாஜி ரவில்லா அறிவுறுத்துகிறார். ஏனெனில், சர்க்கரையை தவிர்க்கும் போது ஏறத்தாழ 20 முதல் 30 சதவீத கலோரிகள் குறைவாகும் என்று அவர் கூறுகிறார்.

அந்த அளவிற்கு கலோரிகள் சர்க்கரையின் மூலமாக நம்முடைய உடலுக்கு கிடைக்கிறது. இதன் மூலம் தொப்பை கூட கொஞ்சமாக குறையத் தொடங்கும் என்று மருத்துவர் பாலாஜி ரவில்லா தெரிவித்துள்ளார். உடலில் தேவையற்ற அளவில் இருக்கும் சதைகள் அனைத்தும் குறையும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சிலர் பார்ப்பதற்கு உப்புசமாக காணப்படுவார்கள். சர்க்கரை உட்கொள்வதை நிறுத்துவதன் மூலம் இது போன்ற பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக, 21 நாட்களுக்கு சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தும் போது இந்த மாற்றங்கள் அனைத்தும் மிகத் தெளிவாக இருக்கும் என்று மருத்துவர் பாலாஜி ரவில்லா வலியுறுத்துகிறார்.

Advertisment
Advertisements

இதன் மூலம் நம்முடைய சருமம் பார்ப்பதற்கு பொலிவாகவும் இளமையாகவும் காட்சியளிக்கும். அதன்படி, இந்த தோற்றம் அடைந்தால் அதனை பராமரிப்பதற்காகவே சர்க்கரை எடுத்துக் கொள்வதை தவிர்க்க தொடங்குவார்கள் என்று மருத்துவர் பாலாஜி ரவில்லா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், விரைவாக உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்கலாம்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Weight Loss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: