இட்லி, தோசைக்குப் பதில் காலையில் இந்த உணவு... எல்லா வியாதியும் மறைந்து போகும்!
காலை நேரத்தில் நாம் எல்லோரும் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு முறை குறித்து மருத்துவர் டெய்சி பரிந்துரைத்துள்ளார். இவை நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று வேளையும் அரிசியால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு தான் அதிகப்படியான நோய் ஏற்படக் கூடும் என மருத்துவர் டெய்ஸி தெரிவித்துள்ளார். குறிப்பாக, இட்லி மற்றும் தோசையை காலை உணவாக சுமார் 90 சதவீதம் மக்கள் சாப்பிடுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
சர்க்கரை நோயாளிகள், மூட்டு வலி இருப்பவர்கள், இருதய நோயாளிகள், உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் எல்லோரும் பெரும்பாலும் மூன்று வேளையும் அரிசி உணவுகளை எடுத்துக் கொண்டவர்களாக இருக்கக் கூடும். இவ்வாறு மூன்று வேளையும் கார்போஹைட்ரேட் எடுத்துக் கொள்வது தவறான வழக்கம்.
எனினும், இரவு நேரத்தில் சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என மருத்துவர் டெய்சி அறிவுறுத்துகிறார். குறிப்பாக, சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொள்வதற்கு காலை நேரமே உகந்ததாக இருக்கும். ராகி பொருட்கள் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரமாகும். எனவே, அதிகம் உழைப்பவர்கள் காலை நேரத்தில் ராகியை எடுத்துக் கொள்ளலாம்.
மதிய நேரத்தில் வரகு அரிசி, தினை அரிசி, சோளம் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளலாம். எனினும், இவை அனைத்தையும் விட மேம்பட்ட உணவு பழக்கம் ஒன்று இருக்கிறது. அதன்படி, காலை எழுந்ததும் மரச் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் 4 ஸ்பூன் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்ததும் ஒரு கிளாஸ் சுடுதண்ணீர் குடிக்க வேண்டும். இதையடுத்து நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
Advertisment
Advertisements
இதற்கடுத்து காலை 7:30 மணிக்கு 150 கிராம் பயிறு வகைகளை சாப்பிட வேண்டும். கருப்பு சுண்டல், வெள்ளை சுண்டல், பச்சை பட்டாணி, கிட்னி பீன்ஸ், சோயா பீன்ஸ், பாசிப்பயிறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிட வேண்டும். இதன் தொடர்ச்சியாக காலை 9:30 மணியளவில் மாதுளை பழச்சாறு, ஆப்பிள், கேரட் மற்றும் பீட்ரூட் ஆகியவை சேர்த்து அரைத்த ஜூஸ் போன்றவற்றை குடிக்கலாம்.
இவ்வாறு நம் காலை உணவை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என மருத்துவர் டெய்சி அறிவுறுத்துகிறார்.
நன்றி - DAISY HOSPITAL Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.