சாதாரண மக்களிடையே வேர்க்கடலை குறித்து பல்வேறு விதமான கருத்துகள் நிலவுகின்றன. ஒரு கிலோ வேர்க்கடலை சாப்பிடுவது 300 மில்லி எண்ணெய் குடிப்பதற்கு சமம் என்றும், இதனால் உடல் எடை அதிகரிக்கும் என்றும் பலர் தவறாக நம்புகிறார்கள்.
Advertisment
மேலும், பச்சையாகவும் உலர்ந்தும் சாப்பிடும் வேர்க்கடலைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல், இரண்டையும் ஒரே மாதிரியாகக் கருதுகின்றனர். இந்நிலையில் வேர்க்கடலையின் நன்மைகள், தீமைகள் குறித்து டாக்டர் கௌதமன் நம்ம டாக்டர் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
பச்சை வேர்க்கடலை மற்றும் உலர்ந்த வேர்க்கடலை இரண்டும் வெவ்வேறு பண்புகளைக் கொண்டுள்ளன என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பச்சை வேர்க்கடலை: இதனை அப்படியே அல்லது வேகவைத்து சாப்பிடும்போது, அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து காரணமாக உடல் எடை அதிகரிக்காது. மாறாக, இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.
உலர்ந்த வேர்க்கடலை: உலர்ந்த வேர்க்கடலைகளை வறுத்து அல்லது பிற முறைகளில் பதப்படுத்தி சாப்பிடுவது உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். மேலும், இது தொடர்பான சில உடல்நல பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும்.
Advertisment
Advertisements
அமெரிக்காவில், குறிப்பாக குழந்தைகளுக்கு வேர்க்கடலை வெண்ணெய் ஒரு பிரபலமான புரதச்சத்து நிறைந்த உணவாக உள்ளது. இது குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலையும், புரதத்தையும் வழங்குகிறது.
வாரத்திற்கு ஒரு முறையாவது குழந்தைகளுக்கு பச்சை வேர்க்கடலை உட்பட பல்வேறு வகையான பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பது நல்லது. இருப்பினும், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே வேர்க்கடலை கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு வேர்க்கடலை சாப்பிடலாம் என்பது உங்கள் உடல் எடையைப் பொறுத்தது. உங்கள் உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 2 கிராம் என்ற அளவில் வேர்க்கடலை சாப்பிடலாம். உதாரணமாக, உங்கள் எடை 50 கிலோ என்றால், நீங்கள் ஒரு நாளைக்கு 100 கிராம் வரை பச்சை வேர்க்கடலை சாப்பிடலாம்.
பச்சை வேர்க்கடலையின் மருத்துவ நன்மைகள்:
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பச்சை வேர்க்கடலை மிகவும் நல்லது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
இதய நோய்கள் உள்ளவர்களுக்கும் பச்சை வேர்க்கடலை உகந்தது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.
புற்றுநோய் உள்ளவர்களுக்கும் பச்சை வேர்க்கடலை நன்மை பயக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
யோகா அல்லது தியானம் செய்பவர்கள், பச்சை வேர்க்கடலையை இரவில் ஊறவைத்து காலையில் ஸ்மூத்தியாக செய்து சாப்பிடலாம். இது உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை வழங்குவதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது. இந்த வேர்க்கடலை ஸ்மூத்தி உடல் எடை குறைக்கவும் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். உலர்ந்த வேர்க்கடலைகளை அதிகமாக சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் மற்றும் உடலில் சூட்டை அதிகரிக்கும். எனவே, இதனை அளவோடு உண்பது நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.