கடுக்காய் மிகவும் சத்தான் ஒன்றுதான். ஆனால் அதனை சிலர் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர் கௌதமன் டாக்டர் இண்டர்வியூ யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் அதாவது ஒரு நாளைக்கு பத்து முறை 15 முறை மலம் கழிக்கும் பிரச்சனை உள்ளவர்கள் கடுக்காய் சாப்பிடக்கூடாது. அதேபோல கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக்கூடாது. ஒருவேளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் குறை பிரசவம், கருச்சிதைவு ஏற்படும் பிரச்சனை உள்ளது. இதை சாப்பிடுவதால் ஒரு சில பயன்களும் உள்ளது.
நன்மைகள்: கடுக்காய் பொடி, வாய், தொண்டை, இரைப்பை, குடலில் உள்ள புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும் வல்லமை இதற்கு உண்டு. வயிற்றுப் பசியைத் தூண்டும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். வாத, பித்த, கபம் ஆகியவற்றால் வரும் பல்வேறு நோய்களையும் குணப்படுத்தும்.
கடுக்காய் பொடியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்றுகளை எதிர்த்து போராடவும் உதவும். இது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதன் மூலம் எடை இழப்புக்கு உதவும்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.