நம் சமையலறையில் இருக்கக்கூடிய 15 பொருட்கள் இன்றைக்கு உடலில் ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுக்கள் மட்டுமில்லாமல் உடலில் நோயே வராமல் தடுக்கக்கூடிய சக்திவாய்ந்த மூலிகைகளை நம் தமிழ் சமூகம் மறந்துவிட்டது.
Advertisment
இன்றைக்கு தொன்றுதொட்டு தமிழ் இலக்கியங்களில் கூட ஒவ்வொரு உணவை சமைக்கும் போதும், அந்த உணவிற்கு நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான, கவனமான மூலிகைகள் எவை அவற்றை நாம் உணவோடு கலக்கும்போது நமக்கு எவ்வாறு நல்ல பயனை அளிக்கிறது என்பதை நாம் மறந்து போய் இருக்கும் நிலையில் நவீன சமையல் முறைக்கு மாறியதால் என்னவோ நாம் மிகப்பெரிய அளவில் நோய்களால் அவதிப்படுகிறோம் அந்த வகையில் ஓமம் தரும் பயன்களை பற்றி டாக்டர் கௌதமன் ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
சித்த மருத்துவத்தில் "மூலிகைகளின் அரசன்" என்று போற்றப்படும் ஓமம், 17 விதமான நோய்களைக் குணப்படுத்தும் திறன் கொண்டது என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஓமம் மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் ஆகியவற்றின் சமநிலையின்மையை சரிசெய்து பல நோய்களைக் குணப்படுத்தும்:
Advertisment
Advertisements
வாதம் சமநிலையின்மை: வாயுத்தொல்லை, வயிறு உப்புசம், அஜீரணம் போன்ற செரிமானப் பிரச்சனைகளை ஓமம் சரி செய்கிறது.
பித்தம் சமநிலையின்மை: நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை (அசிடிட்டி), வயிற்றுப் புண்கள் போன்ற பித்தத்தால் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கிறது.
கபம் சமநிலையின்மை: இருமல், சளி, சுவாசப் பிரச்சனைகள் போன்ற கபத்தால் உண்டாகும் கோளாறுகளுக்கு ஓமம் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
மேலும், ஓமம் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரணம் போன்ற பொதுவான செரிமானப் பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மூட்டு வலி, தசை வலி மற்றும் தலைவலி போன்ற பல்வேறு வகையான வலிகளையும் ஓமம் குறைக்கும். தோல் அரிப்பு, சொறி மற்றும் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கும் இது நன்மை பயக்கும்.
ஓமத்தை பொடியாகவோ, கஷாயமாகவோ அல்லது தேனுடன் கலந்தோ உட்கொள்ளலாம். வலியைப் போக்க ஓமப் பொடியை பசை போல கலந்தோ அல்லது ஓமம் கலந்த எண்ணெயையோ வெளிப்பூச்சாகப் பயன்படுத்தலாம். ஓமத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். இது பல நோய்களின் அபாயத்தைக் குறைப்பதுடன், சில வகையான காய்ச்சலுக்கும் நிவாரணம் அளிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.