பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இன்றைய சூழலில் அனைவருக்கும் இருக்க கூடிய ஒரு பிரச்சனை என்றால் அது தைராய்டு தான். அப்படிப்பட்ட தைராய்டில் இருந்து குணமடைய மற்றும் அது வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.
கொத்தமல்லி டீ குடிப்பது தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு பலன் அளிக்கும். கொத்தமல்லி டீயில் அது மட்டும் இன்றி பல நன்மைகளும் உண்டு. அது எப்படி செய்வது என்று பார்ப்போம்.
செய்முறை
அடுப்பை சிம்மில் வைத்து, ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதையை ஒரு கப் தண்ணீரில் போட்டு 10 - 15 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும்.
பின்னர் தண்ணீர் குடிக்கும் சூட்டிற்கு வந்தவுடன் எடுத்து குடிக்கவும். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்கலாம். ஒரு நாளில் குறைந்தது 2 முறையாவது இதனை குடிக்க வேண்டும். இனிப்பு சுவை வேண்டும் என்றால் சிறிது தேன் சேர்த்துக்கொள்ளலாம். கொதிக்கவைப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு கொத்தமல்லியை ஊறவைத்து பின்னர் கொதிக்கவைக்கலாம். இதனால் அதனுடைய முழு நன்மையும் கிடைக்கும்.
பயன்கள்
தைராய்டு பிரச்சனைக்கு மட்டும் இன்றி மேலும் சில நன்மைகளும் கொத்தமல்லி டி கிடைப்பதால் ஏற்படுகிறது.
இது எடை குறைப்புக்கு உதவுகிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற செரிமான பிரச்னைகளை சரிசெய்கிறது. வயிறு உப்புசம் மற்றும் வாயுத்தொல்லைக்கு தீர்வு கொடுக்கிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும், முடி உதிர்தலை குறைத்து, முடி வளர்ச்சி மற்றும் அடர்த்தியை அதிகரிக்கிறது. முகப்பரு மற்றும் கருமை போன்ற சரும பிரச்னைகளை சரிசெய்கிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“