சுகர் வேகமாக குறையும்... ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் வெந்தயம்; இப்படி பால் செஞ்சும் குடிக்கலாம்: டாக்டர் கௌதமன்

சுகர் வேகமாக குறைய என்ன செய்ய வேண்டும் என்றும் பாலில் கலந்து குடிக்க வேண்டிய ஒரு பொருள் பற்றியும் டாக்டர் கௌதமன் கூறுகிறார்.

சுகர் வேகமாக குறைய என்ன செய்ய வேண்டும் என்றும் பாலில் கலந்து குடிக்க வேண்டிய ஒரு பொருள் பற்றியும் டாக்டர் கௌதமன் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
gauthaman

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக இருக்கும் வெந்தயத்தை 3 நாள் ஊறவைத்து சாப்பிட்டு வர ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம் என டாக்டர் கௌதமன் கூறுகிறார்.

Advertisment

பண்டைய காலம் முதல் இன்று வரை வெந்தயம் எல்லாவித நோய்களுக்கும் மருந்தாக இருக்கின்றது. முறையான உணவு முறைகளில் கவனம் எடுத்தாலே ஆரோக்கியம் கிடைத்திடும். வெந்தயத்தை உணவாக நாம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய், சிறுநீரக மண்டல தொற்றுக்கள் சீராகும் என டாக்டர் கௌதமன் மிஸ்டர் லேடீஸ் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். 

மேலும் பித்தத்தின் சீற்றம் குறைந்து உணவின் மீதுள்ள சிரமம் குறைகின்றது. பெண்களின் மாதவிலக்கு சார்ந்த அசௌகரியங்களை குணமாக்குகின்றது. இயற்கையாக உடல் சூட்டை தனித்து இளமையாக இருக்க செய்கின்றது.

மலசிக்கலற்ற வாழ்க்கையும், மூலநோயும் குணமாக செய்கின்றது. குழந்தைகளுக்கு வயிற்றில் உண்டாகும் புழுக்களை எளிதில் வெளியேற்றி ஆரோக்கியம் தருகின்றது.

Advertisment
Advertisements

தீராத மூட்டு வலிகள், உடல் சார்ந்த வலிகள், இடுப்பு வலிகளால் ஏற்படும் உபாதைகளுக்கு முழு நிவாரணம் அளிக்கின்றது. வாழ்நாள் முழுவதும் நோயற்ற வாழ்வை தந்திடும் காயகல்பமாக உள்ள வெந்தயத்தை உணவாக சாப்பிட்டு ஆரோக்கியம் அடையலாம்.

வெந்தயம்: ஒரு கிலோ உடல் எடைக்கு 1 கிராம் வெந்தயத்தை மூன்று இரவுகள் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பின்னர், வெந்தயத்தை முளைக்க வைத்து, தினமும் 50 கிராம் உட்கொள்ளலாம்—நாள் முழுவதும் அல்லது மாலையில் வெந்தயப் பாலுடன் கலந்தும் குடிக்கலாம். இது இரத்த சர்க்கரையை விரைவாகக் கட்டுக்குள் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது.

மஞ்சள் மற்றும் மிளகு: ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் நான்கு அரைத்த மிளகு கலவையை தண்ணீரில் கலந்து நேரடியாகக் குடிக்கலாம் அல்லது தேநீர் தயாரிக்க கொதிக்க வைக்கலாம். இந்த கலவை குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.

உடலில் குளிர்ச்சி வேண்டும் என நினைப்பவர்கள் வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிடலாம். மற்றவர்கள் வெந்தயத்தை பொடியாக்கி சாப்பிடும் போது தான் அதன் நன்மைகள் முழுமையாக கிடைக்கும் என மருத்துவர் கௌதமன் கூறுகிறார்.

மலச்சிக்கல், உடல் பருமன், மாதவிடாய் கோளாறு, உடல் சூடு போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Diabetes Superfoods that can reduce the risks of diabetes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: