மருத்துவ ரீதியாக ஃபிட்... ஆனாலும் வெயிட் குறையலயா? வெந்நீருடன் இந்த கை மருந்து: டாக்டர் கௌதமன்
அவர் கூறும் இந்தப் பொடி, அன்றாடப் பயன்பாட்டில் உள்ள ஆறு பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம், பக்க விளைவுகள் பற்றிய கவலை இல்லாமல் இயற்கையான முறையில் உடல் எடையைக் குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது.

உடல் எடை என்பது பலருக்குமே ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. சிலர் மருத்துவ ரீதியாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஃபிட்டாக இருந்தாலும், அவர்களின் எடை அதிகமாக இருப்பது அவர்களை கவலையடைய செய்கிறது. இந்தப் பிரச்சனைக்கு வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கக்கூடிய ஒரு மருந்தை கௌதமன் பரிந்துரைக்கிறார். இது தொடர்பான குறிப்புகளை ஆதன் ஆரோக்கியம் என்ற யூடியூப் சேனலில் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
அவர் கூறும் இந்தப் பொடி, அன்றாடப் பயன்பாட்டில் உள்ள ஆறு பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம், பக்க விளைவுகள் பற்றிய கவலை இல்லாமல் இயற்கையான முறையில் உடல் எடையைக் குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது.
பொடி தயாரிக்க தேவையான பொருட்கள்:
சீரகம் - 2 கிராம்
Advertisment
Advertisements
கருஞ்சீரகம் - 2 கிராம்
தனியா - 2 கிராம்
மஞ்சள் - 2 கிராம்
கடுக்காய் - 2 கிராம்
ஆளி விதைகள் - 2 கிராம்
இந்துப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை மற்றும் பயன்பாடு:
இந்த அனைத்து பொருட்களையும் தலா 2 கிராம் வீதம் எடுத்து நன்றாகப் பொடித்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையுடன் ஒரு சிட்டிகை இந்துப்பையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்தப் பொடியை மூன்று வேளைக்குச் சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு வேளை உணவிற்கும் 30 நிமிடங்களுக்கு முன்பாக, ஒரு கிளாஸ் வெந்நீரில் இந்த பொடியைக் கலந்து குடிக்க வேண்டும். இந்த முறையை தொடர்ச்சியாக பின்பற்றி வரும்போது, உடல் எடை படிப்படியாக குறையத் தொடங்கும் என்று மருத்துவர் கௌதமன் தெரிவிக்கிறார்.
உடல் எடையைக் குறைக்க எண்ணற்ற வழிகள் இருந்தாலும், இது போன்ற எளிய, இயற்கையான வீட்டு வைத்தியங்கள் பாதுகாப்பானதாகவும், செலவு குறைந்ததாகவும் அமைகின்றன. மருத்துவ ரீதியாக ஆரோக்கியமாக இருந்தும், அதிக உடல் எடையால் அவதிப்படுபவர்கள் மருத்துவர் கௌதமன் பரிந்துரைக்கும் இந்தப் பொடியை முயற்சி செய்து பார்க்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.