/indian-express-tamil/media/media_files/2025/07/17/gauthaman-tips-2025-07-17-20-51-09.jpg)
அண்மை காலமாக, குறிப்பாக கொரோனா தொற்று மற்றும் நீரிழிவு நோய் அதிகரித்த பிறகு, ஆண்மை குறைபாடு (Erectile Dysfunction) ஒரு முக்கிய பிரச்சனையாக மாறி வருகிறது. இது ஆண்களின் தன்னம்பிக்கையை பாதித்து, திருமண உறவுகளிலும் பிரச்சனைகளை உருவாக்குகிறது. இந்த பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்று மிஸ்டர் லேடிஸ் யூடியூப் சேனலில் மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார்.
ஆண்மை குறைபாட்டிற்கு பல காரணங்கள் இருக்கக் கூடும். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், நரம்பு கோளாறுகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஆகியவை இதில் அடங்கும். இந்த அடிப்படை பிரச்சனைகளை முதலில் சரிசெய்வது அவசியம்.
ஆண்மை குறைபாட்டை சீரமைக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்:
தினசரி நடைபயிற்சி: இன்றைய காலகட்டத்தில், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஆண்கள் உடல் உழைப்பின் முக்கியத்துவத்தை மறந்துவிட்டனர் என்று மருத்துவர் கௌதமன் கூறுகிறார். தினமும் குறைந்தது 5,000 ஸ்டெப்ஸ் நடப்பது இதயத் துடிப்பை சீராக்கி, ஆண்மை செயல்பாட்டை மேம்படுத்தும்.
போதுமான நீர் அருந்துதல்: தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது மிக முக்கியம். ஆயுர்வேத மருத்துவத்தில், நீர் காம உணர்வையும், பாலியல் பலத்தையும் அதிகரிக்கும் என்று வலியுறுத்தப்படுகிறது.
போதுமான தூக்கம்: தினமும் குறைந்தது 7-8 மணி நேரம் தூங்குவது அவசியம். இரவு தாமதமாக தொலைக்காட்சி பார்ப்பது அல்லது மொபைல் போன் பயன்படுத்துவது போன்ற பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.
அடிப்படை பிரச்சனைகளை சரிசெய்தல்: நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், நரம்பு கோளாறுகள் அல்லது ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்ற அடிப்படை பிரச்சனைகள் இருந்தால், முதலில் அவற்றுக்கு மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம். இந்த அடிப்படைப் பிரச்சனைகள் சரிசெய்யப்படாவிட்டால், ஆண்மை குறைபாட்டிற்கான எந்த மருந்தும் பயனுள்ளதாக இருக்காது.
இது தவிர 200 மில்லி லிட்டர் பால் அருந்துவது, அதிகமான புளி, காரம், துவர்ப்பு சுவை உணவுகளை தவிர்ப்பது, சரியான வகையில் ஓய்வு எடுப்பது போன்றவை இப்பிரச்சனைக்கு பலன் அளிக்கும் என்று மருத்துவர் கௌதனம் அறிவுறுத்துகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.