பெண்களின் வரப்பிரசாதம்... இந்தக் கிழங்கை காலை, மாலையில் இப்படி சாப்பிட்டால் பலன் ஏராளம்: டாக்டர் கௌதமன்

தண்ணீர்விட்டான் கிழங்கின் பல்வேறு நன்மைகள் குறித்து மருத்துவர் கௌதமன் விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, இது பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அவர் கூறுகிறார்.

தண்ணீர்விட்டான் கிழங்கின் பல்வேறு நன்மைகள் குறித்து மருத்துவர் கௌதமன் விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, இது பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அவர் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
Kizhangu

பெண்கள் தங்களுடைய ஆரோக்கியத்திற்காக எடுத்துக் கொள்ளக் கூடிய முக்கியத்துவம் மிகவும் குறைவாக இருப்பதாக மருத்துவர் கௌதமன் கூறுகிறார். குறிப்பாக, உலக அளவில் ஏராளமான பெண்கள் சர்க்கரை நோயாளிகளாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

Advertisment

இதேபோல், தையிராட் பாதிப்பு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் மற்றும் இருதய நோய் பாதிப்பும் பெண்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் தண்ணீர்விட்டான் கிழங்கில் அதிகமாக இருக்கிறது என்று மருத்துவர் கௌதமன் அறிவுறுத்துகிறார். அதனடிப்படையில், நாள்தோறும் தண்ணீர்விட்டான் கிழங்கு சார்ந்த மருந்து அல்லது உணவை பெண்கள் அனைவரும் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

அந்த வகையில், இரத்த அழுத்த நோய்க்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இதற்காக தண்ணீர்விட்டான் கிழங்கு பொடியை பால் அல்லது சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம் என்று மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார். 

Advertisment
Advertisements

குறிப்பாக, இந்த கிழங்கின் பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து சுடுதண்ணீரில் கலந்து காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் மருந்தாக குடிக்கலாம் என்று மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொடர்ச்சியாக செய்யும் போது பெண்களின் உடல் ஆரோக்கியம் பலமடங்கு மேம்படும். இதனை உணவுக்கு முன்பாக எடுத்துக் கொள்வது கூடுதல் பலன் அளிக்கும். இது தவிர கருப்பை கட்டிகள், மாதவிடாய் கோளாறுகள், குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளையும் தண்ணீர்விட்டான் கிழங்கு குணப்படுத்துவதாக மருத்துவர் கௌதமன் கூறுகிறார்.

அதனடிப்படையில், தண்ணீர்விட்டான் கிழங்கின் மருத்துவ குணங்களை அறிந்து பயன்படுத்துவது ஆரோக்கியமான வாழ்விற்கு உதவும். பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால், இதனை அவர்கள் அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நன்றி - SHREEVARMA Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

health

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: