டயட், உடற்பயிற்சி எதுவும் வேணாம்... இந்த ஒரு காய் மட்டும் சாப்பிட்டால் போதும்; உடல் எடை அப்படியே குறையும்: டாக்டர் கௌதமன் டிப்ஸ்

கோவக்காய் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை கணிசமான அளவு குறைக்க முடியும் என்று மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார். அதன்படி, சுவையான கோவக்காய் பொறியல் எவ்வாறு செய்வது என்று இதில் பார்க்கலாம்.

கோவக்காய் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை கணிசமான அளவு குறைக்க முடியும் என்று மருத்துவர் கௌதமன் தெரிவித்துள்ளார். அதன்படி, சுவையான கோவக்காய் பொறியல் எவ்வாறு செய்வது என்று இதில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Weight loss trick

உடற்பயிற்சிகள் மற்றும் கடுமையான உணவுக் கட்டுப்பாடுகள் இல்லாமல் கூட உடல் எடையை கணிசமான அளவு குறைக்கலாம் என்று மருத்துவர் கௌதமர் தெரிவித்துள்ளார். இதற்காக கோவக்காய் மட்டும் தினசரி சாப்பிடலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.

Advertisment

அந்த வகையில் மதிய உணவாக 100 கிராம் அளவிற்கு கோவக்காய் சாப்பிடலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார். இவ்வாறு தொடர்ந்து 100 நாட்கள் பின்பற்றினால் சுமார் 5 முதல் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம் என்று மருத்துவர் கௌதமன் கூறுகிறார். இதற்காக சுவையான கோவக்காய் பொறியல் எப்படி தயார் செய்யலாம் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கோவக்காய்,
எண்ணெய்,
கடுகு,
சீரகம்,
மஞ்சள் தூள்,
மிளகாய் பொடி மற்றும்
உப்பு

Advertisment
Advertisements

செய்முறை:

அடுப்பில் கடாய் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். இதில் ஒரு டீஸ்பூன் கடுகு, சீரகம் மற்றும் நறுக்கி வைத்த கோவக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் . அதன் பின்னர், ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான கோவக்காய் பொறியல் தயாராகி விடும்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Weight Loss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: