இந்த 5 மாத்திரையை தூக்கி ஓரம் போடுங்க... சின்ன வெங்காயத்தை மட்டும் இப்படி சேருங்க: டாக்டர் சாலை ஜெய கல்பனா டிப்ஸ்
நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய சில முக்கியமான டிப்ஸை மருத்துவர் சாலை ஜெய கல்பனா தெரிவித்துள்ளார். அவற்றை இந்த செய்திக் குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.
நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய சில முக்கியமான டிப்ஸை மருத்துவர் சாலை ஜெய கல்பனா தெரிவித்துள்ளார். அவற்றை இந்த செய்திக் குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.
இயற்கையான சில உணவு பொருட்கள் நமது உடல் ஆரோக்கியத்தை பெருமளவு மேம்படுத்துகின்றன. அந்த வகையில், அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று ஓம் சரவண பவா யூடியூப் சேனலில் மருத்துவர் சாலை ஜெய கல்பனா தெரிவித்துள்ளார்.
Advertisment
உடல் சூட்டை குறைக்க, இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை அப்படியே விழுங்கி தண்ணீர் குடிக்கலாம். இது காலையில் மலம் கழிக்கும் போது உடலில் உள்ள சூட்டை வெளியேற்றும். மேலும் மலச்சிக்கலையும் போக்கும். பித்தம் மற்றும் சூடு உடம்பு உள்ள ஆண்களுக்கு இது மிகவும் நல்லது.
வெயில் காலத்திற்கு ஏற்ற உணவு கம்பங்கூழ். கம்பு குளிர்ச்சியானது; கேழ்வரகு உஷ்ணம் தரக் கூடியது என்பதை நினைவில் கொள்ளவும். கம்பங்கூழ் உடல் உஷ்ணத்தை குறைத்து, மூலம் வராமல் தடுக்க உதவுகிறது. இதை தொடர்ந்து அருந்தினால் 2 - 5 கிலோ வரை எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்திய மக்கள் குடல் புற்றுநோய் அதிகம் இல்லாமல் இருப்பதற்கு வெங்காயமும், மஞ்சளும் முக்கிய காரணம் ஆகும். வெங்காயம் சேர்த்து சமைக்கும் பழக்கம் இதற்கு உதவுகிறது. ஆஸ்பிரின் மாத்திரையை விட வெங்காயம், இரத்தம் உறைதலை தடுப்பதில் பல மடங்கு சிறந்தது என்று ஆய்வுகள் கூறுகின்றன என்று மருத்துவ கல்பனா தெரிவித்துள்ளார். தினமும் மூன்று சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
Advertisment
Advertisements
கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணும்போது, அதனுடன் சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொண்டால், உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதைத் தடுக்கலாம். வெங்காயத்தில் உள்ள வேதிப்பொருட்கள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன.
வெங்காயம் அன்டிஆன்டிஹிஸ்டமைன் போல செயல்பட்டு, பூச்சிக்கடி, அலர்ஜி மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கு வெங்காயம் ஒரு சிறந்த தீர்வாகும்.
மொத்தத்தில், சர்க்கரை, கொழுப்பு, அலர்ஜி, வீக்கம் மற்றும் இதய நோய்கள் போன்ற பல பிரச்சனைகளுக்கு ஒரு அற்புதமான இயற்கை தீர்வாக வெங்காயம் செயல்படுகிறது என்று மருத்துவர் சாலை ஜெய கல்பனா தெரிவித்துள்ளார் அறிவுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.