உடலை குளிர்வித்து, குடலை சுத்தப்படுத்தும்... வெயிலுக்கு இதை சாப்பிடுங்க! டாக்டர் ஜெயரூபா
தானிய வகைகளில் ஒன்றான கம்புவின் மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் ஜெயரூபா பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். அவற்றை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
உடலை தூய்மைப்படுத்துவதற்காக தினசரி குளிக்கிறோம். அதேபோல், நம் குடலையும் தூய்மைப்படுத்த வேண்டியது அவசியம் என மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார். இதற்காக கம்பை உட்கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
கம்புக்கு நம் உடலை குளிர்ச்சியாக்கும் ஆற்றலும் இருக்கிறது. கம்பு மாவை கூழாக்கி சாப்பிடும் போது நம் குடல் தூய்மையாகும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டிருப்பதாக மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார். செரிமான கோளாறு, மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயாக குடலை தூய்மைப்படுத்த வேண்டும். அவர்கள் கம்பு மாவில் கூழ் செய்து குடிக்கலாம்.
கம்பை, நம் உணவில் எடுத்துக் கொள்ளும் போது போதுமான வலுவை அது வழங்குகிறது. உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் போது பல்வேறு விதமாக பிரச்சனைகள் உண்டாகும். அப்போது, உடல் உஷ்ணத்தை குறைக்க கம்பை கூழாக்கி உட்கொள்ளலாம்.
தசையின் வளர்ச்சியை அதிகரிக்கும் ஆற்றலும் கம்பிற்கு இருக்கிறது. அதன்படி, கம்பை சரியான முறையில் சமைத்து சாப்பிட வேண்டியது அவசியம். கம்பை 4 முதல் 5 மணி நேரம் ஊறவைத்து அதன் பின்னர் தான் சமைக்க வேண்டும் என மருத்துவர் ஜெயரூபா குறிப்பிட்டுள்ளார். இத்துடன், நெய், சுக்கு மற்றும் இந்துப்பு ஆகியவற்றையும் சேர்த்து சாப்பிடலாம்.
Advertisment
Advertisements
எனினும், சிலர் கம்பு எடுத்துக் கொள்வதை தவிர்த்து விடலாம். அதன்படி, கிட்னியில் கல் இருப்பவர்கள், தைராயிட் பிரச்சனை இருப்பவர்கள் கம்பை தவிர்க்கலாம். மற்றவர்கள் தாராளமாக கம்பை உட்கொள்ளலாம் என்று மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார். அதிலும், வெயில் காலத்தில் இது உடலின் உஷ்ணத்தை தனிக்க உதவி செய்கிறது.
நன்றி - SHREEVARMA Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.