பைபிள், குரானில் இதைப் பற்றி குறிப்பு இருக்கு; கொழுப்பை கரைக்க இந்த ஒரு பொடி போதும்: டாக்டர் கார்த்திகேயன்
கருஞ்சீரகம், ஓமம் மற்றும் வெந்தயம் ஆகிய மூன்றையும் லேசாக வறுத்து பொடி செய்து, தினமும் வெந்நீரில் கலந்து குடிக்கலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார். இவ்வாறு செய்யும் போது உடல் எடையை குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது.

கருஞ்சீரகத்தின் பல்வேறு மருத்துவ குணங்கள் குறித்து தனது யூடியூப் சேனலில் மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இது நம் உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக, பைபிள் மற்றும் குரான் போன்ற நூல்களில் கருஞ்சீரகம் பற்றிய குறிப்புகள் இருப்பதாக அவர் கூறுகிறார்.
Advertisment
அதன்படி, கருஞ்சீரகத்தில் தைமோகுயினோன் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது வேறு எந்த தாவரத்திலும் கிடையாது. மேலும், இதில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துகளும் நிறைந்துள்ளன.
பல்வேறு வகைகளில் கருஞ்சீரகம் நமக்கு உதவியாக இருக்கிறது. குறிப்பாக, உடல் எடை குறைப்பு, ரத்த சர்க்கரை அளவை குறைப்பு, வயிற்றுப் புண்களை ஆற்றும் தன்மை, கல்லீரல் ஆரோக்கியம், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் ஆற்றல், தோல் நோய்களுக்கு மருந்தாக செயல்படுவது, கொழுப்பை குறைப்பது, தொற்றுகளை தடுக்கக்கூடியது என பல்வேறு விதமாக கருஞ்சீரகம் உதவி செய்கிறது.
மேலும், தொடர் இருமல் மற்றும் நுரையீரலில் தங்கியிருக்கும் சளியை வெளியேற்ற கருஞ்சீரகம், பூண்டு மற்றும் தேன் கலந்த கலவை உதவும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இது தவிர, மாதவிடாய் பிரச்சனைகளுக்கும் கருஞ்சீரகம் சிறந்த தீர்வாகிறது என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
கருஞ்சீரகம், ஓமம் மற்றும் வெந்தயம் ஆகிய மூன்றையும் லேசாக வறுத்து பொடி செய்து, தினமும் வெந்நீரில் கலந்து குடிக்கலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார். இவ்வாறு செய்யும் போது உடல் எடையை குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது.
கருஞ்சீரகம் பொதுவாக பாதுகாப்பானதாக இருந்தாலும், சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தும் முன் அதனை பரிசோதிப்பது நல்லது. மேலும், கருஞ்சீரகம் இரத்த உறைதலைக் குறைக்கும் தன்மை கொண்டது. எனவே, இரத்தம் உறைதல் தொடர்பான மருந்துகள் எடுப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். கர்ப்பிணி பெண்கள் கருஞ்சீரகம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.