வாழைப்பழம் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கினாலும், அவை சமச்சீர் உணவு முறையின் ஒரு பகுதியாக உட்கொள்ளப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
வாழைப்பழங்களில், செவ்வாழைப் பழம், நேந்திரம் பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று சொல்வது உண்மையா, வாழைப்பழத்தில் அடர்த்தியான மாவுச்சத்து உள்ளது. குறிப்பாக செவ்வாழைப் பழமாக இருக்கட்டும், நேந்திரம் பழமாக இருக்கட்டும் இதில் இருந்து கிடைக்கக்கூடிய மாவுச்சத்து ஒரு அடர்த்தியான மாவுச்சத்து.
நாம் சாப்பிட்ட பிறகு, வேகமாக சர்க்கரை அளவு அதிகரிப்பதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்று கூறுகிறார்கள். செவ்வாழைப்பழத்தின் கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவு 45% எனவும் நேந்திரம் பழத்தின் கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவு 51% எனவும் உள்ளது.
செவ்வாழைப்பழத்தில் இருக்கக்கூடிய மெக்னீசியம், பொட்டாசியம், ரத்த அளவைக் குறைக்கக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் இதயநோய் பிரச்னை இருக்கக்கூடியவர்களும் சாப்பிடக்கூடியதாகத்தான் இந்த செவ்வாழைப்பழம் இருக்கிறது.
Advertisment
Advertisements
இந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவு 55-க்கு குறைவாக இருந்தால், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிடக் கூடிய உணவுகள் என்று சொல்லியிருக்கிறேன். அதனால், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த பழங்கள் வாரத்திற்கு 2 முறை சாப்பிடக்கூடியதாக உள்ளது.
தினமும் ஒரு செவ்வாழைப்பழம் என்று இரண்டு வாரங்களுக்கு தொடர்ச்சியாக செவ்வாழைப்பழம் எடுத்துகொள்ளும்போது, நம்முடைய குடலில் நல்ல பாக்டீரியாக்களின் அளவு பல மடங்கு அதிகரிப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.
இந்த செவ்வாழைப்பழம், குறிப்பாக மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறவர்களுக்கு, அஜீரணக் கோளாறு இருக்கிறவர்களுக்கு, மிகவும் ஒரு நல்ல உணவு மட்டுமல்ல, ஒரு மருந்தாகவே செயல்படும். மலச்சிக்கல் இல்லாமல் பாதுகாக்கும். வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து சீரான குடல் இயக்கத்தை ஊக்குவித்து மலச்சிக்கலை தடுக்கிறது.
வாழைப்பழத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்குகிறது மற்றும் சர்க்கரை இரத்தத்தில் மெதுவாக கலக்க உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.