டாக்டர் கார்த்திகேயன் அவரது யூடியூப் பக்கத்தில் ஒரு கல்லூரி மாணவி பற்றிய உண்மைக் கதையைப் பகிர்ந்துகொண்டார். ப்ரியா என்ற அந்த மாணவி, முதல் வருடத்தில் மிகவும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருந்திருக்கிறார். ஆனால், இரண்டாம் வருடத்தில் அவரது எடை கூடி, பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைச் சந்தித்துள்ளார். இதற்கு காரணம் அவரது காலை உணவுப் பழக்கம் என்றும் அதை எப்படி சரிசெய்யலாம் என்றும் கூறியுள்ளார்.
Advertisment
முதல் வருடத்தில் பேட்மிண்டன் சாம்பியனாகவும், நடனக் குழுவின் தலைவராகவும் இருந்த அந்த மாணவி ப்ரியா, இரண்டாம் வருடத்தில் 10 கிலோவுக்கு மேல் எடை கூடியுள்ளார். படிக்கட்டுகளில் ஏற முடியாமல் தினமும் லிஃப்டைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
அவரது தோழிகள், ப்ரியா அதிக உணவு உண்பதில்லை என்று கூறியுள்ளனர். மேலும் அவர் பெரும்பாலும் இரவு உணவைத் தவிர்த்துள்ளார். ப்ரியாவின் விடுதி காப்பாளர் உட்பட யாருக்கும் காரணம் புரியவில்லை. டாக்டர் கார்த்திகேயன் ப்ரியாவின் பழக்கவழக்கங்களை உன்னிப்பாகக் கவனித்தபோது ஒரு விஷயம் புலப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ப்ரியா தினமும் காலை 11:30 மணி இடைவேளையின்போது ஒரு பப்ஸ் சாப்பிட்டுள்ளார். இந்த உணவு ப்ரியாவுக்கு ஒரு போதையாகவே மாறியிருந்தது. டீ அல்லது காபி குடிக்கும்போது அதனுடன் சேர்த்து இந்த பப்ஸ் சாப்பிடுவது ஒரு வழக்கமாக மாறியது. இது பெரும்பாலும் மைதா மாவு மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெயில் தயாரிக்கப்படும் ஒரு உணவு. இந்த உணவு கல்லூரி மாணவர்களிடையே உடல் எடை அதிகரிப்பு, முகப்பருக்கள், செரிமானப் பிரச்சினைகள், கவனக்குறைவு, மற்றும் அதிக சோர்வு போன்ற பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
Advertisment
Advertisements
டாக்டர் கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளபடி, பப்ஸ் சாப்பிட்டால் இந்தமாதிரியான பிரச்சனைகள் எல்லாம் வரும். உடலின் சக்தியை வேகமாக உறிஞ்சிவிடும், இதனால் சோர்வு ஏற்படும். கவனக்குறைவை ஏற்படுத்தும், இதனால் வகுப்பறையில் கவனம் செலுத்துவது கடினமாகும். உடலில் நீர்த் தேக்கத்தை உருவாக்கி, எடை அதிகரிக்க வழிவகுக்கும். முகப்பருக்கள் மற்றும் எண்ணெய் வடியும் சருமத்திற்கு முக்கிய காரணமாக அமையும். மேலும் தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.
தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொரு கல்லூரி மாணவரும் ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த பப்ஸ் சாப்பிடுவதாகவும், இதனால் ஒரு செமஸ்டருக்கு 400 முறை இதைச் சாப்பிடும்போது 300 கலோரிகள் கூடுதலாக உடலில் சேருவதாகவும் டாக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார். டாக்டர் கார்த்திகேயன் ப்ரியாவிற்கு அந்த குறிப்பிட்ட உணவை நிறுத்தவும், நிறைய தண்ணீர் குடிக்கவும், நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், ஆரோக்கியமான உணவு சாப்பிடவும் அறிவுறுத்தினார். இந்த மாற்றங்களால், ப்ரியாவின் 10 கிலோ எடை குறைந்தது, முகப்பருக்கள் மறைந்தன, செரிமானம் சீரானது, மேலும் அவர் மீண்டும் ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பினார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.