சாப்பிட்டா நரநரன்னு இருக்கும் இந்தப் பழம்... எலும்பு உறுதிக்கு பெஸ்ட்: டாக்டர் கார்த்திகேயன்
சப்போட்டா பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். எனினும், சர்க்கரை நோயாளிகள் இதனை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்துகிறார்.
சப்போட்டா பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். எனினும், சர்க்கரை நோயாளிகள் இதனை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்துகிறார்.
இயற்கையாக கிடைக்கக் கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றை சரியான அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் நம் ஆரோக்கியம் மேம்படும். அந்த வகையில் சப்போட்டா பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.
Advertisment
சப்போட்டா பழம் சாப்பிட்டதும் வாயில் நரநரப்புத் தன்மை இருக்கும். இந்த நரநரப்புத் தன்மை அதிகமாக இருந்தாலே அதில் கால்சியம் சத்து இருக்கிறது என்று அர்த்தம் என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இது நம் எலும்புகளின் உறுதித்தன்மைக்கு வலு சேர்க்கும்.
இதேபோல், சப்போட்டாவில் நார்ச்சத்தும் தேவையான அளவு இருக்கிறது. இவை செரிமான மண்டலம் சீராக இயங்குவதற்கு உதவி செய்கிறது. இது தவிர பொட்டாஷியம் ஊட்டச்சத்தும் சப்போட்டா பழத்தில் அதிகமாக இருக்கிறது.
இதன் மூலம் இரத்த கொதிப்பு மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவை குறைக்கப்படுகிறது. மேலும், எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் சப்போட்டா பழத்தை சாப்பிடலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார். புற்றுநோய் வராமல் தடுக்கக் கூடிய அன்டி ஆக்சிடென்ட்ஸ் சப்போட்டாவில் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
கூடுதலாக, சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தையும் சப்போட்டா பழம் மேம்படுத்துகிறது. இத்தனை மருத்துவ குணங்கள் சப்போட்டாவில் நிறைந்திருந்தாலும், சர்க்கரை நோயாளிகள் இதனை மிகக் குறைவான அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தும் தன்மை சப்போட்டாவிற்கு இருக்கிறது.
எனவே, ஒரு சிறிய துண்டு சப்போட்டா பழம் மட்டுமே சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். மற்ற அனைவரும் இரண்டு பழங்களை சாப்பிடலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் வலியுறுத்தியுள்ளார்.
நன்றி - Doctor Karthikeyan Yourtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.