தலை முதல் பாதம் வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை இது தன்னகத்தே கொண்டுள்ள நாயுருவி இலை மூலம் நோயை குணப்படுத்த உதவுவதாக டாக்டர் மைதிலி தனது யூடியூப் பக்கத்தில் கூறுகிறார்.
Advertisment
மூலம்: மூல வியாதியால் அவதிப்படுபவர்களுக்கு நாயுருவி இலைச் சாறு ஒரு மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. 10 மில்லி நாயுருவி இலைச் சாற்றுடன் 10 மில்லி தண்ணீர் கலந்து, காலை மற்றும் இரவு உணவுக்கு 10 நிமிடங்களுக்கு முன்பு அருந்துவதால் இரத்தப்போக்கு குறைய வாய்ப்புள்ளது.
செரிமானம்: நாயுருவி செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. அஜீரணம், வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற தொல்லைகளுக்கு இது ஒரு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. உணவை எளிதில் செரிக்கச் செய்து, ஊட்டச்சத்துக்கள் உடலில் முழுமையாக சேர உதவுகிறது.
சிறுநீரகம் நலன்: உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்றுவதில் சிறுநீரகத்தின் பங்கு முக்கியமானது. நாயுருவி சிறுநீர் உற்பத்தியை அதிகரித்து, உடலில் உள்ள கழிவுகளை திறம்பட வெளியேற்ற உதவுகிறது. மேலும், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கவும் இது பயன்படுகிறது.
Advertisment
Advertisements
தோலுக்குப் புத்துயிர்: நாயுருவியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினி பண்புகள் தோல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சொறி, அரிக்கும் தோலழற்சி மற்றும் முகப்பரு போன்ற தோல் பிரச்சினைகளுக்கு இது ஒரு இயற்கையான தீர்வாக அமைகிறது.
சர்க்கரை நோய்க்கு ஓர் ஆறுதல்: இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த நாயுருவி உதவுகிறது.
காயங்களை ஆற்றும்: நாயுருவி இலையின் சாறு காயம் மற்றும் புண்களை விரைவாக குணப்படுத்தும் திறன் கொண்டது. இது ஒரு இயற்கையான கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.