சாமை அரிசியை நம் அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். மேலும், இவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
100 கிராம் சாமை அரிசியில் 9.3 மில்லி கிராம் அளவிற்கு இரும்புச் சத்து இருக்கிறது என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். இந்த இரும்புச் சத்து இரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்த சோகை நோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. எனவே, இரத்த சிவப்பு அணுக்கள் கம்மியாக இருப்பவர்கள் சாமை அரிசியை கட்டாயம் சாப்பிட வேண்டும் என அவர் அறிவுறுத்துகிறார்.
மேலும், எலும்புகளை ஆரோக்கியமாக செயல்பட வைக்கும் கால்சியம் சாமை அரிசியில் காணப்படுகிறது. அதன்படி, சாமை அரிசியை உட்கொண்டால், எலும்பு வலிமையாக இருக்கும். குறிப்பாக, இதில் இருக்கும் பாஸ்பரஸ் தசை வளர்ச்சியை சீராக பராமரிக்கிறது.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் தேவைப்படும் புரதமும் சாமை அரிசியில் இருக்கிறது. எனவே, ஏதாவது ஒரு வடிவத்தில் சாமை அரிசியை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். பாயாசம், சாமை அரிசி கீர் என இதனை வித்தியாசமாக கொடுக்கும் போது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்
Advertisment
Advertisement
சாமையில் இருக்கும் மெக்னீஷியம் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது. இவை மட்டுமின்றி புற்றுநோய் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும் சாமை அரிசியில் இருக்கிறது என மருத்துவர் மைதிலி கூறியுள்ளார். எனவே, இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிட வேண்டும். சாதாரண வெள்ளை அரிசியை விட சாமை அரிசியில் 7 மடங்கு நார்ச்சத்து இருக்கிறது.
இவை செரிமான பிரச்சனைகளை தீர்த்து, மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது. ஆண்களின் விந்தணுக்களை அதிகரிக்க சாமை அரிசி உதவுகிறது. இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த சாமை அரிசி நம் உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.