இன்றைய கால கட்டத்தில் பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இதற்கு முக்கியமான காரணமாக சரியான நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் எடுத்துக் கொள்ளததே ஆகும். மலச்சிக்கலுக்கான நல்ல ஆரோக்கியமான வீட்டுக்குறிப்பை டாக்டர் நிஷா டாக்டர் இண்டர்வியூ யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இதை வீட்டிலேயே எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சோற்றுக்கற்றாழை
தேன்
செய்முறை
சோற்றுக்கற்றாழையை நன்கு சுத்தம் செய்து அரை லிட்டர் எடுத்து கொள்ளவும். அதனுடன் தேன் அரை லிட்டர் எடுத்து கொள்ளவும். இரண்டையும் நன்றாக கலந்து பிரிட்ஜில் வைக்கவும்.
இதனை 7 நாட்கள் பிரிட்ஜில் வைத்து 8 ஆவது நாளில் இருந்து இதனை 150 மி.லி சாப்பிட வேண்டும். எந்த நேர்த்தில் வேண்டுமானாலும் சாப்பிட்ட பிறகு சாப்பிடுவது நல்லது.
ஒரு முறை செய்வது 7 நாட்கள் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். ஏழு நாட்கள் இதை சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் புதிதாக இதே போல செய்து சாப்பிடலாம். இதை 21 நாட்கள் நாம் கடைபிடிக்க வேண்டும்.
மலச்சிக்கலுக்கு சூப்பர் மருந்து | இயற்கை மருத்துவர் நிஷா | Constipation | Doctor Interview
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இதை வீட்டிலேயே செய்யலாம். மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.