/indian-express-tamil/media/media_files/2025/05/15/Okktxctmj0h7Fwm94LsF.jpg)
கோடை காலத்தில் சிறுநீரக ஆரோக்கியத்தை பேணுவது அவசியம் ஆகும். சிறுநீரக பிரச்சனைகள் பெரும்பாலும் அறிகுறிகளை வெளிக்காட்டுவதில்லை. இருப்பினும், சில அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை அளிப்பது முக்கியம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், கால்களில் வீக்கம், சிறுநீரில் நுரை, சிறுநீரில் ஏற்படும் துர்நாற்றம், சிறுநீரில் வெள்ளை படிமம், குமட்டல், தலைவலி, செரிமான பிரச்சனைகள் மற்றும் காரணமின்றி எடை இழப்பு ஆகியவை சிறுநீரக பாதிப்பை உணர்த்தும் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார்.
குறிப்பாக, உயர் கிரியேட்டினின் அளவு மற்றும் உயர் யூரியா அளவு ஆகியவை சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சில உணவு முறை மாற்றங்களை பின்பற்றுவதன் மூலம் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்று மருத்துவர் நித்யா வலியுறுத்துகிறார். அவற்றை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
அதன்படி, தினசரி எடுத்துக் கொள்ளும் உணவில் உப்பை குறைக்க வேண்டும். இது தவிர அசைவ உணவுகளை தவிர்த்து விடலாம். மேலும், கிழங்கு வகைகள், பயிறு வகைகள் மற்றும் பருப்பு வகைகளையும் தவிர்த்து விடலாம். இது மட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
வெள்ளைப் பூசணி மற்றும் சுரைக்காயை வேக வைத்து அதன் தண்ணீரை வடிகட்டிய பின்னர், அவற்றை தாளித்து சாப்பிடலாம் என்று மருத்துவர் நித்யா பரிந்துரைக்கிறார். இது சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், கொத்தவரை, சௌ-சௌ மற்றும் புடலங்காய் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு அவசியம். சிறுநீரக பிரச்சனையின் தீவிரத்தை பொறுத்து சரியான உணவு மற்றும் சிகிச்சையை தீர்மானிக்க வேண்டும் என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
நன்றி - Health Cafe Tamil Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.