அடிக்கடி படபடப்பு... இதயம், நுரையீரலை பலப்படுத்தும் இந்த சாறு; இப்படி செய்து குடிங்க: டாக்டர் நித்யா
வைட்டமின் பி மற்றும் இரும்புச் சத்து ஆகியவை நம்முடைய உணவில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக முழு தானிய வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது தவிர எண்ணெய்யில் அதிகமாக பொறித்து எடுத்த உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.

சிலருக்கு அடிக்கடி படபடப்பு போன்ற உணர்வு இருக்கக் கூடும். உதாரணத்திற்கு சிறிது தூரம் நடந்தாலே நிறைய பேருக்கு படபடப்பு இருப்பதாக கூறுகின்றனர். இருதயத்தில் ஏதேனும் குறைபாடு இருந்தால், இது போன்ற உணர்வு இருக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல்களை ஹெல்த் கஃபே தமிழ் யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
அதன்படி, உளவியல் ரீதியாக மன அழுத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால் இத்தகைய உணர்வு இருக்கும். இது தவிர நம்முடைய அன்றாட பணிகளை மேற்கொள்ளும் போது படபடப்பு தோன்றினால், அது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு இருப்பதாக அர்த்தம் என்று மருத்துவர் நித்யா கூறுகிறார்.
ஒரு சிலருக்கு இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அப்படி இருந்தால் படபடப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. சில சமயத்தில் தைராயிடு பிரச்சனை இருப்பவர்களுக்கும் இது போன்ற பாதிப்பு இருக்கலாம். அதனடிப்படையில், சில உணவு முறை மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் இவற்றை சீரமைக்க முடியும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
வைட்டமின் பி மற்றும் இரும்புச் சத்து ஆகியவை நம்முடைய உணவில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக முழு தானிய வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது தவிர எண்ணெய்யில் அதிகமாக பொறித்து எடுத்த உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.
Advertisment
Advertisements
மேலும், ஸின்க் மற்றும் மெக்னீஷியம் ஆகியவை இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். கூடுதலாக, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி ஆகிய கீரைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, புளியாரை கீரையையும் அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார்.
இதேபோல், தான்றிக் காயும் இருதய தசைகளை வலுப்படுத்த உதவி செய்கிறது. இதன் பொடியை தண்ணீர் அல்லது தேனுடன் சேர்த்து சாப்பிடலாம். அதன்படி, தான்றிக்காய் பொடியை காலை அல்லது இரவில் அரை ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளலாம்.
நாள்தோறும் குறைந்தபட்சம் 100 மில்லி லிட்டர் அளவிற்கு மாதுளம் பழச்சாறு குடிக்கலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். செம்பருத்தி பூவையும் தேநீர் போன்று கொதித்து வடிகட்டி குடிக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
இவை அனைத்தையும் தொடர்ச்சியாக பின்பற்றும் போது இருதயம் மட்டுமின்றி நுரையீரலும் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர் நித்யா வலியுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.