இரவில் அடிக்கடி யூரின் வரும்? வாரத்தில் 3 நாள் இந்த 3 கீரை சாப்பிட்டால் போதும்: டாக்டர் நித்யா டிப்ஸ்!
சீந்தில், முளைக்கற்றான், புளியாரைக்கீரை போன்ற கீரை வகைகளை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக, வாரத்திற்கு மூன்று நாட்களாவது இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை சிறுநீர் பாதை ஆரோக்கியத்திற்கு உதவும்.
சீந்தில், முளைக்கற்றான், புளியாரைக்கீரை போன்ற கீரை வகைகளை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக, வாரத்திற்கு மூன்று நாட்களாவது இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை சிறுநீர் பாதை ஆரோக்கியத்திற்கு உதவும்.
இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறதா? இது வெறும் சர்க்கரை நோயின் அறிகுறி மட்டுமல்ல, வேறு பல காரணங்களாலும் ஏற்படலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இது குறித்த பல்வேறு தகவல்களை டாக்டர் பிளஸ் என்ற யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
அதன்படி, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைக்கு சர்க்கரை நோயைத் தாண்டி வேறு என்னென்ன காரணங்கள் உள்ளன என்பதையும், அதற்கான சித்த மருத்துவ தீர்வுகளையும் அவர் விரிவாக விளக்கியுள்ளார்.
பிரச்சனைக்கான முக்கிய காரணங்கள்:
சிறுநீரகக் கற்கள்: சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால், அவை சிறுநீர் கழிக்கும் உணர்வை அதிகரிக்கலாம்
Advertisment
Advertisements
சிறுநீர்ப்பை பாதை தொற்றுகள் அல்லது அழற்சி/பூஞ்சை தொற்றுகள்: சிறுநீர்ப்பையில் ஏற்படும் தொற்றுகள் அல்லது அழற்சி, பூஞ்சை தொற்றுகள் போன்றவை அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
முழுமையற்ற சிறுநீர் வெளியேற்றம்: சிறுநீர் கழித்த பிறகும் சிறுநீர்ப்பையில் அவை தேங்கி நிற்பது, மீண்டும் மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வை ஏற்படுத்தும்.
நாள்பட்ட சிறுநீரக நோய்: சிறுநீரகங்கள் சரியாக செயல்படாதபோது, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
சிறுநீரில் புரதக் கசிவு: சிறுநீரில் நுரை வருவது புரதக் கசிவின் அறிகுறியாக இருக்கலாம். இதுவும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான ஒரு காரணமாகும்.
பலவீனமான இடுப்பு தசைகள்: குறிப்பாக பெண்களுக்கு, இடுப்பு தசைகள் பலவீனமாக இருந்தால், சிறுநீரை அடக்க முடியாமல் அவசரமாக சிறுநீர் கழிக்க நேரிடும்
பிரச்சனைக்கான தீர்வுகள்:
சித்த மருந்துகள்: சிறுநீர்ப்பை தொற்றுகள், புரோஸ்டேட் வீக்கம் அல்லது சிறுநீரக செயல்பாட்டுக் குறைபாடு போன்ற நிலைகளுக்கு "பரங்கிப்பட்டை பதங்கம்" போன்ற மருந்துகள் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
கீரை வகைகள்: சீந்தில், முளைக்கற்றான், புளியாரைக்கீரை போன்ற கீரை வகைகளை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக, வாரத்திற்கு மூன்று நாட்களாவது இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை சிறுநீர் பாதை ஆரோக்கியத்திற்கு உதவும்.
இது தவிர, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருந்தால், உடனடியாக இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும். மேலும், இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவுகளையும் கண்காணிப்பது அவசியம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். எனினும், இந்தப் பிரச்சனை தொடர்ச்சியாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது தேவையற்ற சிக்கல்களை தவிர்க்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.