உடல் உஷ்ணம்? இந்தக் கீரையை வேக வைத்து; இப்படி செஞ்சு குடித்து பாருங்க: டாக்டர் நித்யா

மருத்துவ குணங்கள் நிறைந்த சிறுகீரையை, உடல் உஷ்ணத்தை தணிக்க எவ்வாறு பயன்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா கூறியுள்ளார். மேலும், இதற்காக கசாயம் தயாரிக்கும் செய்முறை குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மருத்துவ குணங்கள் நிறைந்த சிறுகீரையை, உடல் உஷ்ணத்தை தணிக்க எவ்வாறு பயன்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா கூறியுள்ளார். மேலும், இதற்காக கசாயம் தயாரிக்கும் செய்முறை குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Siru keerai uses

நமது பாரம்பரிய உணவு முறையில் கீரைகளுக்கு ஒரு தனி இடம் உண்டு. அவற்றில், எளிதாக கிடைக்கக் கூடியதும், ஏராளமான சத்துகளை  கொண்டதுமாக சிறுகீரை விளங்குகிறது. இது நம் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பங்களிக்கிறது.

Advertisment

வைட்டமின்கள், இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் சிறுகீரையில் அதிக அளவில் காணப்படுகின்றன. சிறுகீரையில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை எளிதாக்கி, மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்கிறது. 

இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த சிறுகீரையை, உடல் உஷ்ணத்தை தணிக்க எவ்வாறு பயன்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா கூறியுள்ளார். மேலும், இதற்காக கசாயம் தயாரிக்கும் செய்முறை குறித்து ஹெல்த் கஃபே தமிழ் யூடியூப் சேனலில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சிறுகீரையை வேர்ப்பகுதியுடன் சேர்த்து முழு தாவரமாக பயன்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இதற்காக, சிறுகீரையை நன்றாக தண்ணீரில் கழுவி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், வேருடன் சேர்த்து சிறியதாக நறுக்கிக் கொள்ளலாம்.

Advertisment
Advertisements

இவ்வாறு சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்த கீரையை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். இப்படி கொதிக்க வைத்தால் சிறுகீரையில் இருக்கும் சத்துகள் முற்றிலும் அந்த தண்ணீரில் கலந்திருக்கும். இதையடுத்து, 5 அல்லது 6 சின்ன வெங்காயத்தை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றையும் அதே தண்ணீரில் போட வேண்டும்.

இத்துடன் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கலாம். இந்த தண்ணீர் சுமார் 10 நிமிடங்களுக்கு கொதித்த பின்னர் வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். இந்த நீரை தினசரி சுமார் 100 மில்லி லிட்டர் அளவிற்கு குடிக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் இந்த கசாயத்தை குடிக்கலாம்.

இதன் மூலம் உடலில் இருக்கும் உஷ்ணத்தை குறைக்க முடியும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். மேலும், சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளையும் இது குணப்படுத்தும் என்று அவர் அறிவுறுத்துகிறார். 

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Amazing benefits of spinach leaves

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: