கடவுள் இதில் அதிக இரும்புச் சத்தை சேர்த்து வச்சிருக்காரு... இந்தக் காயை நெய்யில் வதக்கி சாப்பிடுங்க: டாக்டர் நித்யா

உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்றும் அதற்கு பயன்படும் ஒரு காயை பற்றியும் டாக்டர் நித்யா கூறுகிறார்.

உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்றும் அதற்கு பயன்படும் ஒரு காயை பற்றியும் டாக்டர் நித்யா கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
Dr Nithya ghee

காய்கறிகளில் நாம் பெரும்பாலும் மறந்துவிடும் ஒரு அற்புதமான காய் சுண்டைக்காய். இது அளவில் சிறியதாக இருந்தாலும், அதிகப்படியான இரும்புச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது என்று டாக்டர் நித்யா டாக்டர் இண்டர்வியூ யூடியூப் பக்கத்தில் கொடுத்த இண்டர்வியூவில் கூறி இருக்கிறார். சுண்டைக்காயை வெட்டி சிறிது நேரம் வைத்திருந்தால், அது கருமை நிறமாக மாறுவதைப் பார்க்கலாம். இது அதில் உள்ள அதிக இரும்புச்சத்தின் காரணமாகவே நிகழ்கிறது.
 
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் இரும்புச்சத்து குறைபாட்டிற்கு சுண்டைக்காய் ஒரு அருமருந்தாகும். பச்சை சுண்டைக்காயை நேரடியாக உணவில் சேர்த்தோ அல்லது நெய்யில் சிறிது மிளகுத்தூள் சேர்த்து வதக்கி ஒரு கைப்பிடி அளவு தினமும் சாப்பிட்டு வந்தால், ஒரு வாரத்திலேயே இரும்புச்சத்து அதிகரிப்பதை கண்கூடாகக் காணலாம்.

Advertisment

ஹீமோகுளோபின் அளவு குறைவாக (உதாரணமாக 3 g, 6 g, அல்லது 7 g) உள்ளவர்களுக்கு, தினமும் சுண்டைக்காயைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஹீமோகுளோபின் அளவு விரைவாக அதிகரிப்பதை அறிய முடியும். இரும்புச்சத்து குறைபாட்டைப் போக்க சுண்டைக்காய் ஒரு சிறந்த இயற்கை தீர்வாக அமைகிறது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Foods that helps to boost iron levels Best tips to improve your iron levels

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: