சுகர் 300-ஐ தாண்டுதா? அரை ஸ்பூன் இந்தப் பொடி மோரில் கலந்து குடித்தால் செம்ம மேஜிக்: டாக்டர் நித்யா
டாக்டர் நித்யா உடலில் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க குடிக்க வேண்டிய ஒரு டிரிங் பற்றி கூறுகிறார். அதை எப்படி குடிக்க வேண்டும், அதில் என்ன சேர்க்க வேண்டும் என்று பார்ப்போம்.
டாக்டர் நித்யா உடலில் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க குடிக்க வேண்டிய ஒரு டிரிங் பற்றி கூறுகிறார். அதை எப்படி குடிக்க வேண்டும், அதில் என்ன சேர்க்க வேண்டும் என்று பார்ப்போம்.
ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. நவீன மருத்துவ முறைகளுடன் சேர்த்து, பாரம்பரிய சித்த மருத்துவமும் இதற்கு பல்வேறு எளிய மற்றும் பயனுள்ள தீர்வுகளை வழங்குகிறது. டாக்டர் நித்யா சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் மற்றும் உணவு முறைகள் குறித்து டாக்டர் ப்ளஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
நிறைய நோயாளிகள், ஏற்கனவே அலோபதி மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருக்கும்போது சித்தா மருந்துகளை எடுத்துக்கொள்ள தயங்குகிறார்கள். 'திடீரென ரத்த சர்க்கரை அளவு குறைந்துவிடுமோ (லோ சுகர்)' என்ற அச்சம் அவர்களுக்குள் உள்ளது.
ஆனால், மருத்துவர்கள் உங்கள் தற்போதைய மருத்துவ நிலைக்கு ஏற்றவாறு சித்த மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். எனவே, பயப்படத் தேவையில்லை. மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது, வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு வாரங்களுக்கு ஒரு முறையோ ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்துப் பார்ப்பது நல்லது.
இரண்டு மாதங்கள் இரண்டு மருந்துகளையும் சேர்த்து எடுக்கும்போது படிப்படியாக சர்க்கரை அளவு குறையத் தொடங்கும். அதன் பின்னர், சித்த மருந்துகள் மூலமாகவே முழுமையாக சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும். சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் மூலிகைகள், துவர்ப்பு மற்றும் கசப்பு சுவை கொண்டவையாக இருக்க வேண்டும்.
Advertisment
Advertisements
பாகற்காய்: கசப்புச் சுவை கொண்டது என்றதும் பாகற்காயை நேரடியாக ஜூஸாக குடிப்பது பலரின் வழக்கம். ஆனால், தினமும் பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் வயிற்றுப் பகுதியில் அல்சர், அசிடிட்டி மற்றும் செரிமானப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பாகற்காயை சமைத்து சாப்பிடுவதே சிறந்தது.
அதேபோல அனைத்து சர்க்கரை நோயாளிகளுக்கும் வேப்பம்பூ பொடி உதவியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ - 200 கிராம் தனியா (கொத்தமல்லி விதைகள்) - 100 கிராம் ஏலக்காய் - 20 கிராம் சுக்கு - 20 கிராம் நெய்
செய்முறை:
முதலில் வேப்பம்பூவை நெய் விட்டு லேசாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே நெய்யில் தனியா, ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை லேசாக வறுத்து எடுக்கவும். வறுத்த அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்கு பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
இந்த பொடியை ஒரு நாளைக்கு இரண்டு வேளை, உணவுக்கு முன் (காலை உணவு மற்றும் இரவு உணவுக்கு சுமார் 10-15 நிமிடங்களுக்கு முன்) எடுத்துக்கொள்ள வேண்டும். அரை ஸ்பூன் அளவுக்குப் பொடியை எடுத்து, தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடிக்கலாம்.
உங்கள் சர்க்கரை அளவு 300-350 க்கு மேல் இருந்தால், இரவு நேரத்திலும் இதை எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும். வேப்பம்பூ உடலின் மூலை முடுக்குகளில் உள்ள கழிவுகளை நீக்கும் தன்மை கொண்டது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் கசப்புச் சுவை ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. நெய்யில் வறுப்பதால் கசப்புச் சுவை அதிகம் தெரியாமல் இருக்கும்.
அதேபோல சர்க்கரை நோயாளிகள் கிழங்கு வகைகள் (உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்றவை) முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது. கீரை வகைகளை உணவில் நிறைய சேர்த்துக்கொள்ள வேண்டும். வேப்பம்பூ பொடியை எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரை நோயினால் ஏற்படும் கை, கால் எரிச்சல், நடப்பதில் சிரமம் போன்ற பக்கவிளைவுகளும் படிப்படியாகக் குறையும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.