உடலில் கொழுப்பு அதிகமாகும்போது ஏற்படும் பிரச்சனைகள், கொழுப்பு குறையும்போது ஏற்படும் பாதிப்புகள், மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவும் முறைகள் பற்றி டாக்டர் நித்யா மிஸ்டர் லேடீஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.
Advertisment
விசிரல் ஃபேட் (Visceral Fat): உடல் உள்ளுறுப்புகளில் கொழுப்பு படிதல் அதிகமாகும். இது கல்லீரல், இதயம், மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் குடலைச் சுற்றி கொழுப்பு சேர்வதற்கு வழிவகுக்கும்.
இரத்த நாளங்களில் கொழுப்பு படிதல்: இது இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை தடைசெய்து, அரித்மியா (இதய படபடப்பு), ஹார்ட் பீட் குறைதல் அல்லது அதிகரித்தல், மற்றும் மயோகார்டியல் இன்ஃபாக்ஷன் (MI) போன்ற இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
கொழுப்பு கட்டிகள் (லிப்போமா): உடல் முழுவதும், குறிப்பாக ஸ்கால்ப், முகம், முதுகு, வயிறு, தொடைப் பகுதி மற்றும் முழங்கை பகுதிகளில் சிறிய முடிச்சு போன்ற கொழுப்பு கட்டிகள் உருவாகலாம்.
Advertisment
Advertisements
ஸ்ட்ரோக்: மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும்போது ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
கொழுப்பை குறைக்க தவிர்க்க வேண்டியவை:
ஆல்கஹால்: ஃபேட்டி லிவர் பிரச்சனை உள்ளவர்கள் ஆல்கஹாலை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
அசைவ உணவுகள் மற்றும் டீப் ஃபிரை உணவுகள்: அதிக எண்ணெய் மற்றும் பொரித்த, வறுத்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்:
முட்டைக்கோஸ் ஜூஸ்: வாரத்திற்கு இரண்டு முறை 200 கிராம் முட்டைக்கோஸை நன்றாக அரைத்து வடிகட்டி ஜூஸாக குடிக்க வேண்டும். மேலும் இதோடு சேர்த்து சீரகப்பொடி எடுத்துக் கொள்வதன் மூலம் தொப்பை கொழுப்பு கரையும்.
தேவையான பொருட்கள்:
சீரகம் - 100 கிராம் கருஞ்சீரகம் - 30 கிராம் சோம்பு - 50 கிராம் ஜாதி பத்திரி - 10 கிராம் மராட்டி மொக்கு - 5 கிராம்
செய்முறை: மேற்கண்ட பொருட்களை லேசாக வறுத்து, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
பயன்பாடு: முட்டைக்கோஸ் ஜூஸ் அல்லது வேறு எந்த ஜூஸ் குடித்தாலும், அரை ஸ்பூன் இந்தப் பொடியை கலந்து, மூன்று முதல் ஐந்து துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்க வேண்டும். ஒரு நாள் முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்தால், அடுத்த நாட்களில் பின்வரும் ஜூஸ்களை மாற்றி மாற்றி குடிக்கலாம்:
வெள்ளை பூசணிக்காய் ஜூஸ், பீர்க்கங்காய் ஜூஸ், கொத்தவரங்காய் ஜூஸ், அருகம்புல் ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ், வாழைப்பூ ஜூஸ், வாழைத்தண்டு ஜூஸ் இந்த ஜூஸ்களுடன் சீரகப் பொடியை சேர்த்து குடிக்க வேண்டும்.
வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பைனாப்பிள் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவும் ஒரு முக்கியமான பழம். உடலில் நீர்ச்சத்து அதிகமாக உள்ள பழங்களை உட்கொள்ள வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.