பி.பி-யை ஆரம்பத்திலேயே குறைக்க எலுமிச்சை; இப்படி யூஸ் பண்ணுங்க: டாக்டர் நித்யா
இரத்த அழுத்தத்தை எவ்வாறு குறைக்கலாம் என்று மருத்துவர் நித்யா விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, வீட்டு வைத்திய முறையில் மூலிகை கசாயம் தயாரித்து எப்படி பயன்படுத்துவது என அவர் தெரிவித்துள்ளார்.
இரத்த அழுத்தத்தை எவ்வாறு குறைக்கலாம் என்று மருத்துவர் நித்யா விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, வீட்டு வைத்திய முறையில் மூலிகை கசாயம் தயாரித்து எப்படி பயன்படுத்துவது என அவர் தெரிவித்துள்ளார்.
இரத்த அழுத்தத்தை சுலபமாக எப்படி குறைப்பது என பெரும்பாலானவர்கள் இணையத்தில் தேடி இருப்பார்கள். ஏனெனில், சுமார் 5 ஆண்டுகளாக ஒருவர் இரத்த அழுத்தம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், அதனால் ஏற்படும் விளைவுகள் அபாயமாக இருக்கும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
Advertisment
அதன்படி, இரத்த அழுத்தத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து எளிமையாக கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இரத்த அழுத்தத்தை சித்த மருத்துவத்தில் பித்தம் தொடர்பான நோயாக அணுகி அதற்கு ஏற்ப சிகிச்சை அளிப்பதாக மருத்துவர் நித்யா கூறுகிறார். இதற்கு எலுமிச்சை பெரிதும் உதவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், 100 கிராம் துளசி விதைகள், 50 கிராம் ஏலக்காய், 10 கிராம் கிராம்பு, 10 கிராம் சோம்பு, 50 கிராம் தேற்றான் விதை பொடி, 50 கிராம் அஷ்வந்தங்கா பொடி ஆகிய அனைத்தையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சுடுதண்ணீரில் கலந்து நான்கு அல்லது ஐந்து துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.
இந்த மூலிகைகள் அனைத்தும் உடலில் அதிகமாக கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. மேலும், இரத்த அழுத்தத்தையும் இவை குறைக்கின்றன. எனவே, இந்த மூலிகை கசாயத்தை இரத்த அழுத்தம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் குடிக்கலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
இது தவிர இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அதிகமாக எண்ணெய் சேர்த்த உணவுகள், அசைவம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார்.
நன்றி - Dr.Nithya's Varam Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.