காலையில் இதை குடிச்சிட்டு வாக்கிங் போங்க: உடல் கொழுப்பை கரைக்க டாக்டர் நித்யா டிப்ஸ்
கொழுப்புகளை நீக்க உடல் எடையை குறைக்க, என்னதான் நடைபயிற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை என்று புலம்புபவர்களா நீங்கள், அப்போ அதற்கு குடிக்க வேண்டிய கசாயம் ஒன்றை பற்றி டாக்டர் நித்யா கூறுகிறார்.
கொழுப்புகளை நீக்க உடல் எடையை குறைக்க, என்னதான் நடைபயிற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை என்று புலம்புபவர்களா நீங்கள், அப்போ அதற்கு குடிக்க வேண்டிய கசாயம் ஒன்றை பற்றி டாக்டர் நித்யா கூறுகிறார்.
உடல் பருமனாக உள்ள ஆண் பெண் இருவருமே தங்கள் உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்க, பல வழிகளில் முயற்சி செய்வார்கள். மேற்கொண்டு அனைத்து முயற்சிகளும் பலன் கொடுக்கவில்லையா? அப்போ அதற்கு டாக்டர் நித்யா தனது யூடியூப் பக்கத்தில் ஒரு சூப்பரான டிப்ஸ் ஒன்றை கூறி இருக்கிறார் அது பற்றி பார்ப்போம்.
Advertisment
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பெண்கள், நடுத்தர வயதினர் என பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. உடல் உழைப்பு இல்லாதது, எப்போதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது உள்ளிட்ட பிரச்னைகளால் உடலில் கொழுப்பு அதிகரித்து உடல் எடை கூடும், தொப்பை விழும்.
குறிப்பாக பெண்களுக்கு பிரசவம் முடிந்தவுடன் ஏற்படும் உடல்நிலை மாற்றத்தின் காரணமாக உடல் எடை அதிகரிக்கும் நிலை உருவாகும். இந்த மாதிரி உடல் எடை அதிகரிப்பு, கொழுப்பு அதிகரிப்பு காரணமாக உடலில் பாதிப்பு ஏற்படுவதால், இதனை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.
ஆனால் இந்த கொழுப்புகளை குறைப்பதற்கு, எளிமையாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஒரு தயார் செய்து குடித்தால் விரைவில உடல் எடை மற்றும் உடலில் இருந்து கெட்ட கொழுப்புகளை குறைக்கலாம் என்று டாக்டர் நித்யா அட்வைஸ் கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
டிப்ஸ் 1: வெதுவெதுப்பான தண்னீரில் இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, பாதாம் பிசின், புதினா இலைகள் சேர்த்து தினமும் காலையில் குடித்து விட்டு நடைபயிற்சி செய்யலாம்.
டிப்ஸ் 2: கொத்தமல்லி குடிநீர் - கொத்தமல்லி, துளசி, ஃப்ளாக்ஸ் சீட்ஸ், பட்டை, சோம்பு, ஓமம் வறுத்து டீ பவுடர் மாதிரி தயார் செய்து புதினா இலை, எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம். கழிவுகளை வெளியேற்றும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.