கோடை காலத்தில் சிறுநீரகத்தை பாதுகாக்க என்ன செய்யலாம் என்று டாக்டர் நித்யா மிஸ்டர் லேடீஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கிறார். கோடைகாலத்தில் சிறுநீர் எரிச்சல் கடுப்பு போன்ற நிறைய பிரச்சனைகள் வரும்.
Advertisment
இதில் இருந்து எப்படி பாதுகாப்பது எந்த மாதிரியான உணவு முறை பின்பற்றுவது என்று பார்க்கலாம். சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு பெரும்பாலும் சிறுநீர் கழிப்பதில் தான் பிரச்சனை ஏற்படும்.
அடிவயிற்றில் வலி, எரிச்சல் போன்றவை இருந்தாலும் சிறுநீரக பிரச்சனை உள்ளதாக அர்த்தம். கோடைகாலத்தில் சிறுநீர் கழிக்கும் போது அதனுடன் சிறிது ரத்தம் சேர்ந்து வருதல், வலி, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் வரும். இதற்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
டிப்ஸ் 1: தினம்தோறும் சாப்பிடும் உணவு முறைகளில் நீர் சத்து அதிகம் நிறைந்த காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், முலாம்பழம் சாப்பிடலாம்.
Advertisment
Advertisements
டிப்ஸ் 2: தினமும் நீராகாரம் எடுத்துக் கொள்ளலாம். சிறுபீளை சூரணத்தை நீராகாரத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இந்த சிறுபீளை சூரணம் என்பது பூலாப்பூ கலந்து செய்யக்கூடியது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனால் சிறுநீரகப் பிரச்சனைகள் வராது.
டிப்ஸ் 3: தேவையான அளவுக்கு மல்லி எடுத்து மோரில் இதை ஒருநாள் இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும். காலையில் அதை வெயிலில் வைத்து எடுத்து அதை பயன்படுத்தலாம். இந்த மோரில் காயவைத்த மல்லி துவையல் மாதிரி செய்து சாப்பிடலாம். இதனால் சிகேடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.