நரம்பை இரும்பாக்கும்... வெந்நீருடன் இந்தப் பொடி; 2 வேளை சாப்பிடுங்க: டாக்டர் நித்யா
நமது உடலில் நரம்புகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. நரம்பு மண்டலம் சரியாக செயல்படவில்லை என்றால், பார்வை, பேச்சு மற்றும் நடை போன்ற அத்தியாவசிய செயல்பாடுகள் பாதிக்கப்படலாம்.
நமது உடலில் நரம்புகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. நரம்பு மண்டலம் சரியாக செயல்படவில்லை என்றால், பார்வை, பேச்சு மற்றும் நடை போன்ற அத்தியாவசிய செயல்பாடுகள் பாதிக்கப்படலாம்.
சமீப காலமாக, நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சனைகள், குறிப்பாக கை கால் நடுக்கம், இளம் வயதினரிடம் அதிகரித்து வருகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், நரம்புகளை பலப்படுத்தவும் சித்த மருத்துவத்தில் எளிய மற்றும் பயனுள்ள வழிமுறைகள் உள்ளன என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இது குறித்த பல்வேறு தகவல்களை மிஸ்டர் லேடிஸ் யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
அதன்படி, நமது உடலில் நரம்புகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. நரம்பு மண்டலம் சரியாக செயல்படவில்லை என்றால், பார்வை, பேச்சு மற்றும் நடை போன்ற அத்தியாவசிய செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். நரம்பு செல்கள் வலுவாக இருக்க புரதம், வைட்டமின் பி12, மெக்னீசியம், சின்க் மற்றும் இரும்பு போன்ற சத்துக்கள் அவசியம் ஆகும்.
நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த இரண்டு பொருட்களை பயன்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார். இதில் பிரண்டை முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில், நரம்புகளை பலப்படுத்தவும், எலும்புகளுக்கு நன்மை செய்யவும் பிரண்டை உதவுகிறது. அதன்படி, பிரண்டையின் வெளிப்புற தோலை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, 24 மணி நேரம் மோரில் ஊறவைத்து, பின்னர் வெயிலில் உலர்த்தி பொடி செய்ய வேண்டும். இது தவிர வாய்விடங்கம் மூலிகையும் உடலில் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
எனவே, இந்த இரண்டு பொடிகளையும் ஒன்றாக கலக்க வேண்டும். இவற்றை தினமும் இரண்டு வேளை 2-3 கிராம் அளவில் சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம். இவ்வாறு செய்யும் போது, நரம்பு தொடர்பான பிரச்சனைகள், தசைகள், எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார். எனினும், இந்த பிரச்சனை தொடர்பாக தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள், தங்கள் மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் இதனை பயன்படுத்த வேண்டும்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.