கற்றாழை தோலை நீக்கி... உடல் எடை குறைய காலையில் இதைப் பண்ணுங்க: டாக்டர் நித்யா

உடல் எடையை குறைப்பதற்கான சில எளிமையான வழிமுறைகளை மருத்துவர் நித்யா பரிந்துரைத்துள்ளார். அவை என்னவென்று இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Aloe vera juice

இளம் வயதில் இருப்பவர்கள் பலர் தற்போது உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் உடல் எடை அதிகமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். சிலர் தாங்கள் எடுத்துக் கொண்ட மாத்திரைகள் மற்றும் சிகிச்சைகளால் உடல் எடை அதிகரித்திருப்பதாக கூறுகின்றனர்.

Advertisment

சிலரது வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை வழக்கத்தாலும் உடல் எடை அதிகமாக இருக்கும். இது போன்ற காரணங்கள் நிறைய இருந்தாலும், உடல் எடை அதிகரித்தால் அவை ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

உடல் எடை அதிகரித்தால் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இருதய நோய் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே, சில வழிமுறைகளை பின்பற்றி உடல் எடையை குறைக்க வேண்டும். அதில் முதலாவதாக பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். இதேபோல், தேவையில்லாத உணவுகளையும் சாப்பிடக் கூடாது.

அசைவ வகை உணவுகளை அதிகமாக எண்ணெய்யில் பொறித்து சாப்பிடக் கூடாது. குறிப்பாக, இது போன்ற உணவுகளை இரவு நேரத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது. எளிமையான முறையில் கற்றாழையை பயன்படுத்தி உடல் எடையைக் குறைக்கலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

அதன்படி, கற்றாழையை தோல் நீக்கி விட்டு கழுவிய பின்னர் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் அரை ஸ்பூன் சிற்றரத்தை பொடி மற்றும் 15 துளிகள் எலுமிச்சை சாறு ஆகிய அனைத்தையும் சேர்த்து காலை நேரத்தில் குடிக்கலாம். இது உடல் எடையை குறைக்க பயன்படுகிறது என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். 

இதனை குடிக்கும் போது பசி உணர்வு கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, அதற்கு பின்னர் பசி எடுக்கும் போது மட்டும் சாப்பிட்டால் போதுமானதாக இருக்கும். இந்தச் சாறு உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற பயன்படுகிறது. 

நன்றி - Dr.Nithya's Varam Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Basic tips for sustainable weight loss Health risk of restrictive diet for weight loss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: