சுகர் சட்டுன்னு குறையும்... காலை வெறும் வயிற்றில் இந்தப் பழத்தில் ஜூஸ்; இப்படி ரெடி செய்து குடிங்க: டாக்டர் ராஜலட்சுமி

சுகர் சட்டுன்னு குறைய காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய ஜூஸ் பற்றி டாக்டர் ராஜலட்சுமி கூறுகிறார்.

சுகர் சட்டுன்னு குறைய காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய ஜூஸ் பற்றி டாக்டர் ராஜலட்சுமி கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
rajalakshmi

சர்க்கரை நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய ஒரு ஜூஸ் பற்றி டாக்டர் ராஜலட்சுமி காஸ்மோ ஹெல்த் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

கோவைக்காய், சில சமயங்களில் சர்க்கரை நோயை முழுமையாகக் குணப்படுத்தும் என்ற தவறான தகவல்களுடன் பரப்பப்பட்டாலும், அதன் உண்மையான சாத்தியக்கூறுகள் மற்றும் சித்த மருத்துவத்தின் பார்வையில் அதன் நன்மைகள் என்ன என்பதை பற்றி அவர் கூறுகிறார். 
 
கோவைக்காயின் தாவரவியல் பெயர் 'காக்சினியா கிராண்டிஸ்' (Coccinia grandis). இது ஒரு கொடி வகைத் தாவரமாகும். இத்தாவரத்தின் காய், பழம், தண்டு, இலை, கிழங்கு என அனைத்துப் பாகங்களும் உணவு மற்றும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. கோவைக்காயில் இனிப்புத் துவர்ப்பு மற்றும் கசப்பு என இரண்டு வகைகள் உள்ளன.

கோவைக்காயில் நார்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி1 மற்றும் பி2 சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக 100 கிராம் கோவைக்காயில் கிட்டத்தட்ட 93.5 கிராம் நீர்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு அத்தியாவசியமான வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் குறைபாட்டை நீக்குவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.

சர்க்கரை நோய் மற்றும் கோவைக்காய்: அறிவியல் ரீதியான அணுகுமுறை
கோவைக்காயில் உள்ள நார்ச்சத்து, இரத்தத்தில் சர்க்கரை மெதுவாக வெளியிடப்படுவதை உறுதி செய்கிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்பட்டு, மூன்று மாத சர்க்கரை அளவான HbA1c சீராக இருக்க உதவுகிறது.

Advertisment
Advertisements

ஆராய்ச்சி தரவுகள், கோவைக்காய் இன்சுலின் உணர்திறனை (insulin sensitivity) அதிகரிப்பதாகக் கூறுகின்றன. வகை 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பது பிரச்சனையல்ல, ஆனால் சுரந்த இன்சுலினை செல்கள் சரியாகப் பயன்படுத்த முடியாமல் போவதே முக்கியப் பிரச்சனை. இதை இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் (insulin resistance) என்பர். கோவைக்காய் இந்த இன்சுலின் ரெசிஸ்டன்ஸைக் குறைக்கும் தன்மை கொண்டது.

மேலும், கோவைக்காய் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பது (Hypoglycemic), கொழுப்பின் அளவைக் குறைப்பது (Hypolipidemic), மற்றும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவது (Liver function improvement) போன்ற முக்கியமான பண்புகளைக் கொண்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு கல்லீரல் பாதிப்பு மற்றும் கொழுப்பு சேகரம் (fatty liver) பொதுவான பிரச்சனைகள். இரத்தத்தில் சர்க்கரை அதிகமாவது நாளடைவில் கொழுப்பாக மாறுவதைத் தடுப்பதிலும் கோவைக்காய் உதவுகிறது.

காய்: வாயில் சுவையின்மை (அரோசகம்), சளி (கபம்), மற்றும் கரப்பான் (எக்ஸிமா, டெர்மடைடிஸ்) போன்ற தோல் நோய்களைப் போக்கும் குணம் உண்டு. குறிப்பாக, கோவை வற்றல் இந்த நன்மைகளைத் தருகிறது.

இலை: கோவை இலையின் இளம் தளிர்களைக் கொண்டு குடிநீர் வைத்து அருந்துவது இரத்த சர்க்கரை அளவை சீர் செய்ய உதவுகிறது. மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.

கிழங்கு (வேர்): கோவைக்காயின் கிழங்குக்குத் தான் இனிப்பு நீர் (சர்க்கரை நோய், குறிப்பாக சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவது - புரோட்டீனூரியா) மற்றும் பித்தம், சூழை, சுவாசம், கபம் போன்ற முத்தோஷ நோய்களைப் போக்கும் குணம் உள்ளதாக அகஸ்தியர் குணவாகடம் கூறுகிறது. இதன் சாறு சீந்தில் சர்க்கரை போன்ற சித்த மருந்துகளுடன் சேர்த்து சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பாத எரிச்சல் போன்ற சிக்கல்களுக்கும் அளிக்கப்படுகிறது.
 
சர்க்கரை நோயாளிகள் கோவைக்காயை உணவுடன் சமைத்துச் சாப்பிடலாம். ஜூஸாகவும் சாப்பிடலாம். 

சுமார் 10 சிறிய கோவைக்காய்களை (பெரியதாக இருந்தால் 5) எடுத்து, வெளிப்புறத் தோலைச் சீவவும் (பூச்சிக்கொல்லி எச்சங்களைத் தவிர்க்க). வீட்டுத் தோட்டத்தில் விளைந்தால் தோலுடன் பயன்படுத்தலாம்.

பழுத்த கோவைக்காய்கள் கிடைத்தால் இன்னும் நல்லது, ஏனெனில் அதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம், இது இதயம் மற்றும் இரத்த நாளங்களுக்கு நல்லது. காய்களை நன்கு அலசி, அரைத்து ஜூஸ் எடுக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்.

இதனுடன் இரண்டு சிட்டிகை லவங்கப்பட்டைத் தூள் சேர்த்து, தினமும் காலை மற்றும் மாலை வெறும் வயிற்றில் பருகவும். இந்த ஜூஸ் சர்க்கரை நோயில் ஏற்படும் சோர்வு, கால்களில் புண்கள், கண் பாதிப்புகள், பாத எரிச்சல் போன்றவற்றைக் குறைக்க உதவும்.

இன்சுலின் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை நோயாளிகள் கோவைக்காய் ஜூஸ் எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரை அணுக வேண்டும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இரத்த சர்க்கரை அளவு திடீரெனக் குறைந்து, ஹைப்போகிளைசிமியா ஏற்படும் வாய்ப்பு உள்ளது. 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Superfoods that can reduce the risks of diabetes Diabetes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: