5 பல் பூண்டை இப்படி தட்டி... வெயிட் சட்டுன்னு குறைய செம்ம டிரிங்க்: டாக்டர் ராஜலட்சுமி டிப்ஸ்

பல பிரச்சனைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு உடல் எடையை சரியான முறையில் குறைப்பது அவசியம். அதன்படி, உடல் எடை குறைப்பிற்கு பூண்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர் ராஜலட்சுமி விவரித்துள்ளார்.

பல பிரச்சனைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு உடல் எடையை சரியான முறையில் குறைப்பது அவசியம். அதன்படி, உடல் எடை குறைப்பிற்கு பூண்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர் ராஜலட்சுமி விவரித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Uses of Garlic

இன்றைய நவீன காலகட்டத்தில், மாறி வரும் வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக உடல் பருமன் என்பது ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இது வெறும் அழகியல் பிரச்சனை மட்டுமல்ல; பல்வேறு தீவிர நோய்களுக்கு வழிவகுக்கும் ஒரு முக்கியமான சுகாதார பிரச்சனையாகும். உடல் பருமன் என்பது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதைக் குறிக்கிறது.

Advertisment

உடல் பருமன் இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. இதனால் உடல், இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாமல் போகிறது. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, டைப் 2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது. உடல் பருமன் உள்ளவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வரும் ஆபத்து சாதாரண எடையுள்ளவர்களை விட பல மடங்கு அதிகம்.

அதிக உடல் எடை, இரத்த அழுத்தம், கொழுப்பு (கொலஸ்ட்ரால்) மற்றும் ட்ரைகிளிசரைடு அளவுகளை அதிகரிக்கும். இவை அனைத்தும் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் வருவதற்கான முக்கிய காரணிகளாகும். மாரடைப்பு, இதய செயலிழப்பு மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான பிரச்சனைகளுக்கு உடல் பருமன் வழிவகுக்கும்.

எனவே, இது போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு உடல் எடையை சரியான முறையில் குறைப்பது அவசியம். அதன்படி, உடல் எடை குறைப்பிற்கு பூண்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர் ராஜலட்சுமி யூடியூப் சேனலில் விவரித்துள்ளார்.

Advertisment
Advertisements

இதற்காக, 5 பல் பூண்டை நன்றாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். இத்துடன் 5 துளிகள் நல்லெண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும். இந்த பூண்டு தண்ணீரை தினசரி இரவு நேரத்தில் குடித்து வந்தால் உடல் எடை குறையும் என்று மருத்துவர் ராஜலட்சுமி அறிவுறுத்துகிறார்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Weight Loss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: