/indian-express-tamil/media/media_files/2025/05/10/evJrxVWkyTgCTwyAomey.jpg)
நமக்கு குறைவான அளவில் தேவைப்படும் உணவுகளை மைக்ரோ ஊட்டச்சத்துகள் என்று கூறுவோம் என மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் தெரிவித்துள்ளார். அதன்படி, வெவ்வேறு வண்ணங்களில் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
உதாரணமாக, வெள்ளை, ஆரஞ்சு, சிவப்பு போன்ற வண்ணங்களில் இருக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் அனைத்து விதமான வைட்டமின்களும் கிடைத்து விடும் என்று மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் கூறுகிறார்.
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கீரைகள் மற்றும் கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ கண்பார்வைக்கு நல்லது. காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது. இது குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் இவ்வளவு நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.
அடுத்தபடியாக, மேக்ரோ ஊட்டச்சத்துகள் நமக்கு தேவைப்படும். இவற்றை மூன்று விதங்களாக பிரித்துக் கொள்ளலாம். கார்போஹைட்ரேட்ஸ், ஃபேட்ஸ் மற்றும் புரதம் ஆகியவை நமக்கு தேவைப்படும் சத்துகள். ஆனால், இதில் புரதத்தை யாரும் சரியான அளவில் எடுத்துக் கொள்வதில்லை என்று மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், அதிகமாக உடல் உழைப்பில் ஈடுபடும் நபர் தேவையான அளவு கார்போஹைட்ரேட் உணவுகளையும், அதிகம் உடல் உழைப்பு இல்லாத நபர் புரதச் சத்து நிறைந்த உணவுகளையும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் அறிவுறுத்துகிறார்.
மேலும், வயது ஏறும் போது புரசத் சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் பின்பற்றுவதன் மூலம் 90 வயது வரை நம்முடைய பணிகளை நாமே செய்து ஆரோக்கியமாக வாழலாம் என்று மருத்துவர் சந்தோஷ் ஜேக்கப் வலியுறுத்தியுள்ளார்.
நன்றி - Behindwoods Hits Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.