அல்சர் என்பது வயிறு புண் ஆகும். வயிற்றில் எரிச்சல், நெஞ்சு எரிச்சல், அசிடிட்டி, காஸ்ட்ரிக் போன்றவை ஏற்படும். இதனா நெஞ்சு பகுதியில் குத்துதல் போன்ற உணர்வு இருக்கும். அவர்கள் என்ன செய்தால் இந்த அல்சர் பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என டாக்டர் ஷர்மிகா டெய்ஸி ஹாஸ்பிடல் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
டிப்ஸ் 1: சோம்பு, சீரகம் ஆகியவற்றை ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகும் வாயில் போட்டு நன்று மென்று முழுங்க வேண்டும்.
டிப்ஸ் 2: மற்றொரு குறிப்பு உள்ளது. அது வெண்டைக்காயை நன்கு உப்பு தண்ணீரில் கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். பின்னர் காலை எழுந்ததும் அந்தத் தண்ணீரை எடுத்து குடிக்கலாம். சற்று வழவழப்பாக தான் இருக்கும். ஆனால் விரைவில் வயிற்றுப்புண் சரியாகும்.
டிப்ஸ் 4: பழைய சோறு தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
Advertisment
Advertisements
டிப்ஸ் 5: ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தயிர் கஞ்சி சாப்பிட்டால் வயிறு புண் குணமாகும் என்றும் டாக்டர் ஷர்மிகா கூறுகிறார்.
காரமான உணவுகள், மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதால், எதுக்களித்தல் பிரச்னை அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது, கடுமையான வயிற்றுவலி ஏற்படும். அதனால், மிளகாய், மிளகு, மிளகாய்ப் பொடி ஆகியவற்றை உங்கள் மெனுவில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.