சிறுதானியம் சாப்பிட்டால் இந்த 2 பிரச்சனை... அதுக்கு இப்படி சமைத்தாலே போதும்: டாக்டர் சிவகுமார்
சிறுதானியங்களில் ஃபைடேட்டுகள், டானின்கள் போன்ற "ஊட்டச்சத்து எதிர்ப்பு காரணிகள்" (Anti-Nutritional Factors) உள்ளன. இவை உடலில் அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் புரதங்களின் உறிஞ்சுதலைத் தடுக்கின்றன.
சிறுதானியங்களில் ஃபைடேட்டுகள், டானின்கள் போன்ற "ஊட்டச்சத்து எதிர்ப்பு காரணிகள்" (Anti-Nutritional Factors) உள்ளன. இவை உடலில் அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் புரதங்களின் உறிஞ்சுதலைத் தடுக்கின்றன.
சமீபகாலமாக, சிறுதானியங்களின் நன்மைகள் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, ராகி, கம்பு, தினை, குதிரைவாலி, சாமை, வரகு, பனிவரகு, சோளம் போன்ற சிறுதானியங்கள் நார்ச்சத்து, புரதம், ஒமேகா-3 அமினோ ஆசிட், வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துகள் ஆகியவை இவற்றில் நிறைந்துள்ளன.
Advertisment
மேலும், இவற்றில் அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதோடு, குறைந்த கிளைசெமிக் கொண்டிருப்பதால், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய்களை தடுக்கவும், எடை குறைப்புக்கும் உதவுகின்றன.
இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், சிறுதானியங்களில் ஃபைடேட்டுகள், டானின்கள் போன்ற "ஊட்டச்சத்து எதிர்ப்பு காரணிகள்" (Anti-Nutritional Factors) உள்ளன. இவை உடலில் அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் புரதங்களின் உறிஞ்சுதலைத் தடுக்கின்றன. மேலும், வயிற்று வலி மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளையும் இவை ஏற்படுத்தலாம். அந்த வகையில் இவற்றை எவ்வாறு தடுக்கலாம் என்று மருத்துவர் சிவகுமார் தனது யூடியூப் சேனலில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இந்த ஊட்டச்சத்து எதிர்ப்பு காரணிகளை குறைத்து, சிறுதானியங்களின் முழுமையான நன்மைகளை பெற நான்கு எளிய முறைகள் உள்ளன:
Advertisment
Advertisements
வறுத்தல் (Roasting): சிறுதானியங்களை வறுப்பதன் மூலம் ஃபைடேட்டுகள், டானின்கள் மற்றும் டிரிப்சின் தடுப்பான்களை கணிசமாக குறைக்கலாம்.
ஊறவைத்தல் (Soaking): சிறுதானியங்களை 12 முதல் 18 மணி நேரம் ஊறவைப்பதன் மூலம் கிட்டத்தட்ட 100% ஃபைடேட்டுகளை அகற்ற முடியும்.
முளைகட்டுதல் (Sprouting): சிறுதானியங்களை முளைகட்டுவதன் மூலம் ஊட்டச்சத்து எதிர்ப்பு காரணிகளின் கலவை மாறுகிறது. இது ஃபைடேட்டுகள் மற்றும் டானின்களைக் குறைக்கிறது.
புளிக்கவைத்தல் (Fermenting): புளிக்கவைத்தல் மிகவும் பயனுள்ள முறையாகும். இது நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கி, ஊட்டச்சத்து எதிர்ப்பு காரணிகளை கிட்டத்தட்ட முழுமையாக நீக்குகிறது. இதன் மூலம் 100% ஃபைடேட்டுகள் மற்றும் 80% டானின்கள் மற்றும் டிரிப்சின் தடுப்பான்கள் அகற்றப்படுகின்றன.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.