லோ பி.பி - ஹை பி.பி: இரண்டையும் சரி செய்யும் உணவு இதுதான்; டாக்டர் சிவராமன்

முருங்கைக் கீரையில் இருக்கக் கூடிய பல்வேறு மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். அவற்றை இந்த செய்திக் குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.

முருங்கைக் கீரையில் இருக்கக் கூடிய பல்வேறு மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். அவற்றை இந்த செய்திக் குறிப்பில் விரிவாக பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
bp

சிலரது உடலில் இரத்த அழுத்தம் சில நேரங்களில் குறைவாக காணப்படும். மேலும், சிலருக்கு இரத்த அழுத்தம் அதிகமாக காணப்படும். அந்த வகையில்  இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும் உணவாக முருங்கைக் கீரை விளங்குகிறது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

Advertisment

குறிப்பாக, உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறைவான இரத்த அழுத்தம் இருக்கும் அனைவருக்கும் இது மருந்தாக செயல்படுகிறது. இது தவிர முருங்கைக் கீரையில் மேலும் பல்வேறு மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்று ஹெல்த் தமிழ்நாடு யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.

முருங்கைக் கீரையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, தொற்று நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.  கால்சியம் சத்து அதிக அளவில் இருப்பதால், எலும்புகள் மற்றும் பற்கள் வலுப்பெற உதவுகிறது. வளரும் குழந்தைகளுக்கு இது உகந்ததாக இருக்கும்.

முருங்கைக் கீரையில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து இரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது. முருங்கைக் கீரை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

Advertisment
Advertisements

இதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக செயல்பட உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது சிறந்த நிவாரணம் அளிக்கும். வைட்டமின் ஏ சத்து கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. முருங்கைக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டிருப்பதால், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவு. அதன்படி, இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த முருங்கைக் கீரை, நம்முடைய உணவில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

moringa

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: